சொந்தமாக கார் கிடையாது.. துணை ஜனாதிபதி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனின் சொத்து எவ்வளவு தெரியுமா?
சென்னை: பாஜக கூட்டணி கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக செயல்பட்டு வரும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமாக கார் இல்லை என்பதும், அவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல்நலனை காரணம் காட்டி அவர் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். அடுத்த மாதம் 9 ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் பாஜக வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக அவர் உள்ள நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை மனதில் வைத்து சிபி ராதாகிருஷ்ணனுக்கு இந்த முக்கிய பொறுப்பை பாஜக மேலிடம் வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் சிபி ராதாகிருஷ்ணனின் சொத்து மதிப்பு பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2019ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிட்டார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பிஆர் நடராஜனிடம் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில், சிபி ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் பற்றிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், அவரது சொத்து மதிப்பு ரூ.67.11 கோடி என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் பணம், வங்கி முதலீடு, பங்கு சந்தை முதலீடு, காப்பீடு, நகைகள் உள்ளிட்ட என்று மொத்தம் ரூ.7.31 கோடி அசையும் சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் விவசாய நிலம், பிற நிலங்கள், வணிக கட்டடங்கள், ரெசிடென்சியல் கட்டடங்கள் என்று ரூ.59.6 கோடிக்கு அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் 2025ம் ஆண்டின் நிலவரப்படி அவரது சொத்து மதிப்பு ரூ.55-65 கோடி வரை இருக்கலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி கோடிக்கணக்கில் சிபி ராதாகிருஷ்ணன் சொத்து வைத்திருந்தாலும் கூட அவருக்கு சொந்தமாக கார் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications