9வது நாளாக.. இன்றும் மாற்றம் இல்லை.. ஒரே விலையில் விற்கப்படும் பெட்ரோல், டீசல்!
சென்னை: தொடர்ந்து 9 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஹைதராபாத்தில் மட்டும் பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தினமும் சர்வதேச நிலவரத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் டீசல் விலையை தீர்மானம் செய்கிறது. தனியார் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறிய பின் தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்தது .

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது.கடந்த ஜனவரியில் இருந்து பிரென்ட் க்ருட் எண்ணெய் விலை உயர்ந்து வந்தது. பிரென்ட் க்ருட் எண்ணெயின் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 69.36 டாலரை தொட்டது. இது 2.62 டாலர் உயர்ந்தது.
இதன்பின் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. ஆனாலும் கடந்த 9 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் இந்தியாவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தேர்தல் நெருங்கும் நிலையில் தொடர்ந்து 9 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சென்னையில் பெட்ரோல் விலை 93.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டெல்லியில் பெட்ரோல் விலை 97.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 81.47 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் மட்டும் பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 11 பைசா உயர்ந்து 87.24 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 85.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 94.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 87.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 97.57 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 88.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலைதான் இதுவரை விற்கப்பட்டதிலேயே அதிக விலை ஆகும்.
-
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications