இந்திய அணியின் கேப்டன் பதவியை துறக்கிறாரா கிங் கோலி? மௌனம் கலைத்த பிசிசிஐ.. வெளியான முழு பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகுவதாக வெளியான செய்திகளுக்கு பிசிசிஐ அமைப்பின் பொருளாளர் விளக்கம் அளித்துள்ளார். இன்று காலையில் இருந்து தீவிரமாக இது தொடர்பான பல செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது.

Recommended Video

    T20 World Cup-க்கு பிறகு Virat Kohli பதவி விலகுவதாக வெளியான தகவல்.. உண்மை என்ன ?

    இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் கோலியும் ஒருவர். ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை என்றாலும் இந்திய அணியை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது கோலிதான். முக்கியமாக இந்திய அணியின் பவுலிங் படையை உலகத்தரத்திற்கு மாற்றியதில், டெஸ்ட் அணியை "சேனா" நாடுகளை விட சிறந்த அணியாக மாற்றியதும் கோலிதான்.

    இந்த நிலையில்தான் கோலி இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக செய்திகள் வெளியாகின. உலகக் கோப்பை டி 20 தொடர்தான் அவர் வெள்ளை பால் போட்டிகளில் கேப்டனாக ஆடும் கடைசி போட்டி. அதற்கு பின் அவர் கேப்டனாக தொடர மாட்டார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கேப்டனாக நீடிப்பார் என்று கூறப்பட்டது.

    செய்தி

    செய்தி

    ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் இன்று இந்த தகவல் பரவியது. அதன்படி கேப்டன் பதவியை கோலி துறக்க முடிவு செய்துவிட்டார். தனது கேப்டன் பதவியை ரோஹித் சர்மாவிற்கு கொடுக்க போகிறார். ரோஹித் சர்மா இனி இந்திய ஒருநாள் மற்றும் டி 20 அணியின் கேப்டனாக இருப்பார். கோலி டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக இருப்பார் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே இணையம் முழுக்க இது தொடர்பாக தீவிரமாக விவாதம் நடந்தது.

     பல வருடமாக கருத்து

    பல வருடமாக கருத்து

    இந்த விவாதம் கடந்த சில வருடமாகவே தீவிரமாக நடந்து வருகிறது. முக்கியமாக இந்திய அணி கடந்த உலகக் கோப்பை 50 ஓவர் போட்டியில் செமி பைனலில் தோல்வி அடைந்தது. அந்த சீசனில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. இதில் தோல்வி அடைந்த பின் ரோஹித் சர்மாவை கேப்டனாக வேண்டும் என்று கடும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. பல தரப்பில் இருந்தும் ரோஹித் சர்மாதான் சிறந்த கேப்டன் மெட்டீரியல் என்று பேச்சுக்கள் அடிப்பட்டன.

    ஐபிஎல் வெற்றிகள்

    ஐபிஎல் வெற்றிகள்

    ரோஹித் சர்மாவும் 5 முறை ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியை வெற்றிபெற வைத்து இருக்கிறார். ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் இவர்தான். அதோடு பும்ரா, பாண்டியா, சூர்யா குமார் யாதவ் உள்ளிட்ட பல வீரர்களுக்கு அடையாளம் கொடுத்தவர் ரோஹித். ஒருவகையில் ரோஹித் சிறந்த ஐபிஎல் கேப்டன் என்றாலும் இந்த ஒரே காரணத்திற்காக அவரை இந்திய அணியின் கேப்டனாகவும் நியமிக்க வேண்டுமா என்ற கேள்விகள் நிலவியது.

    மும்பை பிரஷர்

    மும்பை பிரஷர்

    மும்பை லாபியும் தங்கள் மண்ணின் மைந்தன் ரோஹித்தை எப்படியாவது கேப்டனாக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் மும்பை லாபி, சென்னை லாபி, பெங்களூர் லாபி, டெல்லி லாபி மிகவும் வலிமையானது. டெல்லி, மும்பை இரண்டும் அதிக முறை கேப்டன்சியை பெற்று இருக்கிறது. தமிழ்நாடு எப்படியாவது ஒரு ஸ்பின் பவுலரை அல்லது பேஸ் பவுலரை அணிக்கு அனுப்பிவிடும். பெங்களூரோ ஒரு பேஸ்ட்மேனையாவது அனுப்பிவிடும். இப்படிப்பட்ட நிலையில்தான் எப்படியாவது கேப்டன்சியை ரோஹித்துக்கு பெற்றுத்தர மும்பை லாபி துடிக்கிறது.

    ஐசிசி கோப்பைகள்

    ஐசிசி கோப்பைகள்

    கேப்டன் கோலி ஐபிஎல் கோப்பைகளை வென்றது இல்லை. ஐசிசி போட்டிகளில் நாக் அவுட் சுற்றுகளில் கோலியின் கேப்டன்சி சிறப்பாக இருந்ததில்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ஸ் போட்டியிலும் கூட கோலியின் அணி தேர்வு கொஞ்சம் விமர்சனங்களை சந்தித்தது. இதில் இந்தியா தோல்வி அடைந்தது. ஆனாலும் கூட கோலிதான் இப்போதும் இந்திய அணியின் முகம். இந்திய அணியில் ஒரு கோலி இல்லை 11 கோலி இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு வீரர்களையும் தனது ஸ்டைலுக்கு மாற்றி பாண்டிங் கீழே இருந்த ஆஸி அணி போல இந்திய டீமை செதுக்கி இருக்கிறார்.

     கோலி பேட்டிங்

    கோலி பேட்டிங்

    இருந்தாலும் கூட அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுதான் வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் கோலி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக கேப்டன்சியை துறக்க தயாராகிவிட்டார் என்று இன்று வெளியான செய்தியில் கூறப்பட்டது. கடந்த ஒன்றரை வருடமாக அவர் செஞ்சுரி அடிக்கவில்லை. பார்ம் அவுட்டில் இல்லை என்றாலும் செஞ்சுரி அடிக்க முடியாமல் திணறுகிறார். இதனால் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக அவர் பதவி விலக போவதாக இன்று வெளியான ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

     ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    ஆனால் இந்த ரிப்போர்டுகள் அனைத்தையும் பிசிசிஐ அமைப்பின் பொருளாளர் அருண் தும்பால் மறுத்துள்ளார். அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மீடியாவில் தவறான செய்திகள் பரவுகிறது. இந்திய அணியின் அனைத்து பார்மெட் போட்டிகளிலும் கோலிதான் எப்போதும் போல கேப்டன். பிசிசிஐ எப்போதும் இரட்டை கேப்டன்சி குறித்து விவாதித்தது கிடையாது. இப்போதும் நாங்கள் அதை பற்றி விவாதிக்கவில்லை. இது தொடர்பாக பரவும் செய்திகள் அனைத்தும் வதந்தி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மீட்டிங் நடந்ததா?

    மீட்டிங் நடந்ததா?

    பிசிசிஐ இன்று நடத்திய மீட்டிங்கில் கோலி பதவி விலகல் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியானது.ஆனால் அப்படி ஒரு மீட்டிங் நடக்கவில்லை என்று பிசிசிஐ அமைப்பின் பொருளாளர் அருண் தும்பால் தெரிவித்துள்ளார். இதனால் கேப்டன்சி மாற்றம் தொடர்பான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கோலி ஒருவேளை கேப்டன்சியை விட்டு போனாலும் தன்னைவிட இளமையான வீரருக்கே கேப்டன்சியை கொடுத்து பயிற்சி அளிப்பார். பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், கே. எல் ராகுல் இப்படி யாராவது ஒருவருக்குத்தான் லாஜிக்படி அடுத்த கேப்டன்சி செல்ல அதிக வாய்ப்பு உள்ளதே தவிர வயது அதிகம் கொண்ட ரோஹித்திற்கு இந்த கேப்டன்சி செல்ல வாய்ப்பு குறைவுதான்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+