எடப்பாடி கோரிக்கையை ஏற்காத சபாநாயகர்.. அலுவல் ஆய்வு குழுவில் ஓபிஎஸ்.. ஆர்.பி.உதயகுமாருக்கு இல்லை
சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர், எம்எல்ஏ-க்களின் இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி இருவரும் அருகருகே அமரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. இதனிடையேதான் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீா்செல்வம் செயல்பட்டு வருகிறாா். அவா் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதில் துணைத் தலைவராக ஆா்.பி. உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவா் அப்பாவுக்கு எடப்பாடி பழனிசாமி பல முறை கடிதம் கொடுத்தார்.

சபாநாயகர் முடிவு?
அதேபோல் ஓ.பன்னீா்செல்வமும் அதிமுக தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுக நிா்வாகிகள் மாற்றம் தொடா்பாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், எங்களை ஆலோசித்தே எடுக்க வேண்டும் என்று பேரவைத் தலைவருக்குக் கடிதம் கொடுத்துள்ளாா். இந்த விவகாரம் குறித்து பேரவைத் தலைவா் அப்பாவு இன்னும் அவரின் முடிவை அறிவிக்கவில்லை.

இருக்கைகள் மாற்றம்?
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினா்களின் பலம் 66ஆக உள்ளது. இதில் தனியாகச் செயல்பட்டு வரும் ஓ பன்னீா்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகிய 4 எம்எல்ஏ-க்கள் தவிர அனைவரும் இபிஎஸ் அணியில் இருக்கின்றனர். இதனால் சட்டப்பேரவையில் யார்யாருக்கு எங்கு இருக்கைகள் அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்
இந்த நிலையில் சட்டப்பேரவையில் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர், எம்எல்ஏ-க்கள் இருக்கைகளில் மாற்றமில்லை என்று தெரிய வந்துள்ளது. சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் இந்த நிலையில் சட்டப்பேரவையில் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர், எம்எல்ஏ-க்கள் இருக்கைகளில் மாற்றமில்லை என்று தெரிய வந்துள்ளது. சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பட்டியலை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார். அதில், சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்களில் பட்டியலில் ஓபிஎஸ் பெயர் உள்ளது. அதேபோல் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் ஆர்.பி. உதயகுமார் பெயர் இடம்பெறவில்லை. பட்டியலை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார். அதில், சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்களில் பட்டியலில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் பெயர் உள்ளது. அதேபோல் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் ஆர்.பி. உதயகுமார் பெயர் இடம்பெறவில்லை.

அருகருகே ஓபிஎஸ் - இபிஎஸ்?
ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகளில் மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர் செல்வம் இருவரும் அருகருகே அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications