தப்பு பண்ணவங்களை விட்டுடுங்க.. மகாபலிபுரத்தில் காவலாளியை தாக்கிய பெண்கள் கோர்ட் வளாகத்தில் டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் காவலாளியை குடும்பத்தோடு சேர்ந்து தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்த போது, தங்கள் மீது தவறே இல்லை என ஆவேசமாக கத்திக்கொண்டே சென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் நோ பார்க்கிங் வழியாக சொகுசு கார் ஒன்று செல்ல முயன்றது. இதைக் கவனித்த அங்கு பணியில் இருந்த காவலாளி ஏழுமலை என்பவர் காரை ஐந்துரத வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கூறினார்.

no-fault-on-us-says-family-who-attacked-the-security-guard-in-chennai-mahabalipuram

அதை மீறி காரில் வந்தவர்கள் காரை நோ பார்க்கிங்கில் நிறுத்த முயன்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் ஏழுமலை அவர்களை திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் காரில் இருந்து இறங்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர். பீப் வார்த்தைகளால் திட்டி தாக்கினர். மேலும் காவலாளி ஏழுமலை தனது கையில் வைத்து இருந்த பைப்பை பிடுங்கி அவரை, சரமாரியாக அடித்தனர்.

சிறிது நேரத்தில், 4 சுற்றுலா பயணிகளும் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் முகத்தில் காயமடைந்த ஏழுமலை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதற்கிடயே காவலாளியை காரில் வந்த சுற்றுலாப்பயணிகள் சரமாரியாக தாக்கிய காட்சிகளை வீடியோவாக எடுத்த சுற்றுலாப் பயணிகள் அதை சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இந்த வீடியோ அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், காவலாளி ஏழுமலையை தாக்கியவர்கள் யார் என்று விசாரணை நடத்தினர். இதில் காவலாளியை சரமாரியாக தாக்கியவர்கள் யார் என்ற விவரம் தெரியவந்தது. இதையடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். காவலாளியை தாக்கியது சென்னையைச் சேர்ந்த பிரபுதாஸ், சண்முகப்பிரியா, கீர்த்தனா ஆகியோர் என்பதும் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

முடிச்சூரை சேர்ந்த அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் மூவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக நீதிமன்றத்தில் போலீசார் முன்று பேரையும் ஆஜர்படுத்த அழைத்து சென்ற போது, தப்பு பண்ணியவர்களை விட்டுவிடுவிகிறார்கள்.

தப்பு செய்தவர்களை விட்டுவிடுகிறார்கல் என்று கூறியபடியெ சென்றனர். மேலும் எங்க மேல ஒரு தப்பும் இல்லை.. அந்த செக்யூரிட்டி மீதுதான் தவறு உள்ளது. கெட்ட வார்த்தையில் திட்டினால் யாருங்க பொறுமையாக இருப்பார்கள்.. நீங்க பொறுமையாக இருப்பீர்களா? என ஆவேசமாக பேசியபடி சென்றனர். இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+