வாய்க்கரிசி போட்டுக் கொண்டுதான் திமுகவுக்கு வந்தோம்.. வைரலாகும் ஜெ.அன்பழகன் பேச்சு
சென்னை: மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தைரியமான பேச்சுக்கும், தைரியமான செயல்பாட்டுக்கும் சொந்தக்காரர்.
கட்சித் தலைமைக்கு, அடிமட்டத்தில் உள்ள பிரச்சினைகளை மூடி மறைக்காமல் முழுமையாக சொல்லக்கூடியவர் அன்பழகன். தலைமை கோபித்துக் கொள்ளும் என்ற தயக்கமும் அவருக்கு இருந்தது கிடையாது, என்பது இவரது தனி குணம்.
திமுக தலைமையின் போர்வாள் போல எதிர்கட்சிகளை நோக்கி பாய்ந்தாலும், தனது சொந்த கட்சிக்குள் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட என்றுமே தயங்காதவர்.

தைரியம்
அன்பழகனின் தைரியமான செயல்பாடுகள் மற்றும் பேச்சாற்றல் பெயர் பெற்றது. இந்த நிலையில்தான் அவர் முன்பு ஒருமுறை பேசிய வீடியோ தற்போது வைரலாக சுற்றி வருகிறது. அதில், அவர் தனக்கு பயமே கிடையாது என்று தெரிவிக்கிறார்.
|
வீடியோ
அதற்கான காரணங்களையும் அவர் கூறுகிறார். இந்த குறுகிய வீடியோவில் என்ன சொல்லியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில், சுற்றி வருகிறது. அதில் அன்பழகன் என்ன கூறியுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்.

பயம் கிடையாது
எங்களுக்கு ஒன்றும் பயம் கிடையாது. பயந்து கொண்டு அரசியலில் இல்லை. நாங்கள் எல்லாம் வாய்க்கரிசி போட்டுக் கொண்டுதான் திமுகவுக்கு உள்ளேயே நுழைந்து உள்ளோம். அதனால் கவலையே கிடையாது. பயம் என்றால் என்னவென்றே தெரியாது. தலைவர் கலைஞர் வளர்ப்பு அப்படி.

கம்பீரம்
வெற்றி தோல்வி எங்களை ஒன்றும் பாதிக்காது. இந்த மேடையில் நாங்கள் உட்கார்ந்து இருக்கிறோமே, 7 வருடமாக எதிர்க்கட்சியில் இருப்பவர்களைப் போலவா உட்கார்ந்திருக்கிறோம். ஆளும் கட்சி கூட இவ்வளவு கம்பீரமாக நின்று பேச முடியாத அளவுக்கு நாங்கள் கம்பீரமாக பேசுகிறோம். இவ்வாறு அன்பழகன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications