யாரோ சொல்லித்தந்து பேசுறார்.. கூட்டணிக்கு வர முடியாது! எடப்பாடி கோரிக்கையை நிராகரித்த சிபிஎம், விசிக
சென்னை: அதிமுக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை விசிக, சி.பி.எம். கட்சிகள் நிராகரித்தன. திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி என திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம் என்று எடப்பாடி கூறிய நிலையில் சிபிஎம், விசிக அதை புறக்கணித்துள்ளது,

குற்றச்சாட்டு வைத்துள்ளார். திருமாவளவன் பதிலடி
திருமாவளவன் வைத்த குற்றச்சாட்டில், அதிமுக - பாஜகவின் பழைய கூட்டணியில் இருந்த கட்சிகளே மீண்டும் அவர்களுடன் சேரவிலையே. பாமக மீண்டும் கூட்டணியில் இணையவில்லை. தேமுதிக மீண்டும் கூட்டணியில் இணையவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் புதிய புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்க வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பின் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றெல்லாம் சொன்னீர்களே.. இப்போது என்ன ஆகிவிட்டது? ஏன் கூட்டணியில் வேறு கட்சிகள் இணைய முடியாமல் போய்விட்டது? ஏன் உங்கள் கூட்டணியில் இருந்த பழைய கட்சிகளே உங்களுடன் சேர மறுத்து வருகிறார்கள். திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளை இப்போது அழைக்கிறீர்கள்.
இது நீங்கள் சொன்ன கருத்தா ? அப்படி தெரியவில்லை. இதை எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு யாரோ சொல்லிக்கொடுக்கிறார்கள். திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று யாரோ சொல்லிக்கொடுத்த கருத்து போல இருக்கிறது என்று, விசிக தலைவர் எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிபிஎம் பதிலடி
எடப்பாடி பேச்சுக்கு, சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடுமையான பதிலடியை கொடுத்துள்ளார். அதன்படி, எடப்பாடி பழனிசாமி அவர்கள் காலையில் ஒரு பேச்சு அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு. நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பேச்சு அதற்கு நேர்மாறாக இப்போது பிஜேபியோடு கூட்டணி. போன வாரம் கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார், இந்த வாரம் அழைக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கு அவர் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல. வஞ்சக வலை என்பதை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்.ஆர்எஸ்எஸ் எனும் புதை குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பது அதிமுக தான் என்று பதிலளித்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை சிபிஎம் நிராகரித்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.
எடப்பாடி அழைப்பு
முன்னதாக நேற்று சிதம்பரம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு.. அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?
இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை விசிக, சி.பி.எம். கட்சிகள் நிராகரித்தன. திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி என திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications