மெட்ரோ ரயில் கொடுத்த அப்டேட்..நாளை மேட்ச் பார்க்க போகும் சிஎஸ்கே ஃபேன்ஸ் இதை கவனத்தில் வச்சிக்கோங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்ற போது சென்னை சேப்பாக்கம் மைதானம் செல்வதற்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச பயண சலுகையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்து இருந்தது. இந்த நிலையில், பிளே ஆஃப் போட்டிகளுக்கு இந்த சலுகை கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்றது. 10-அணிகள் மோதிய இந்த போட்டி விறு விறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்றது. தற்போது லீக் சுற்றுக்கள் முடிந்த நிலையில் பிளே ஆஃப் போட்டிகள் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது.

No free Metro travel for IPL play-off Matches : Chennai Metro Rail limited

பிளே ஆஃப் சுற்று போட்டிகள் இரண்டுமே சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டனஸ் அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி பெறும் அணி 2-வது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டும்.

நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட ஒரு அறிவிப்பு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதாவது, ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது முதல், ஐபிஎல் போட்டிகளைக் காண சேப்பாக்கம் செல்லும் கிரிக்கெட் ரசிகர்கள், இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து இருந்தது.

சென்னை அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்திருந்தால் போதும் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. மேட்ச் நடைபெறும் நாட்களில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு இலவச பேருந்து மற்றும் ரயில் சேவை அளிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியிருந்தது.

போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருந்தது. இந்த நிலையில் நாளை பிளே ஆஃப் போட்டியைக் காணவும் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு திரண்டு வர உள்ளனர். ஏனெனில், நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டி இதுவே ஆகும்.

இறுதி போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. எனவே நாளை டோனியை பார்க்கவும் சி.எஸ்.கே அணியை உற்சாகப்படுத்தவும் ரசிகர்கள் குவிய இருக்கின்றனர். இந்த நிலையில் தான் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட ஒரு அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது. அதாவது பிளே ஆஃப் போட்டிகளுக்கு மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க முடியாது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால், பிளே ஆஃப் போட்டிகளை காண சேப்பாக்கம் மைதானம் செல்லும் ரசிகர்கள் டிக்கெட் எடுப்பது அவசியம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. லீக் போட்டிகளை சிஎஸ்கே நிர்வாகத்துடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கியிருந்தது. ஆனால், பிளே அஃப் சுற்றுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துவதால் டிக்கெட் எடுப்பது அவசியம் ஆகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+