தண்ணீரில் ஓடும் கார்? 900 கிமீ தூரம் நிக்காம போகும்.. வியக்க வைத்த விஞ்ஞானி.. வீடியோவை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விற்கும் விலைக்கு கார் வாங்க வேண்டுமா என பலரும் தயங்கி வரும் நிலையில், பெட்ரோலும் வேண்டாம், டீசலும் வேண்டாம் தண்ணீர் ஊற்றினாலே ஓடும் காரை ஈரானை சேர்ந்த விஞ்ஞானி ஒரு உருவாக்கியுள்ளதாக வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது. இது உண்மை எனில் கார் உலகில் பெரும் புரட்சியே வெடிக்கும் எனவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

கார், பைக்குகள் கூட வாங்கிவிடலாம். அதற்கு பெட்ரோல், டீசல் போடுவதற்குதான் செலவு கட்டுப்படியாகவில்லை என்று வாகன ஓட்டிகள் சொல்வதை பார்த்திருக்க முடியும். இன்றைய தேதிக்கு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ₹100.80 ஆகவும், டீசல் சுமார் ₹92.39 ஆகவும் விற்பனையாகிறது.

Car scientist Sciene Water engine

தண்ணீரில் ஓடும் கார்

தற்போது மின்சார வாகனங்கள் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசலுடன் ஒப்பிடும் போது மின்சார வாகனங்களுக்கான எரிபொருள் செலவு சற்று குறைவு என்று கூறினாலும், இன்னும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மின்சார வாகனங்கள் பயன்பாடு பரவலாக மாறவில்லை. சர்வதேச அளவில் புதைபொருள் எரிபொருளை பயன்படுத்தியே பெருமளவு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

சரி அதெல்லாம் இருக்கட்டும், இங்கே விஷயத்திற்கு வருவோம். வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் போது, தண்ணீரை ஊற்றினாலே ஓடுவது போல வாகனங்கள் தயாரிக்க மாட்டார்களா? என்று வேடிக்கையாக சிலரும் கற்பனை செய்து பார்ப்பார்கள். ஆனால், உண்மையில் நடந்ததாக சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:-

ஒரு லிட்டர் தண்ணீரில் 90 கிமீ போகலாம்

ஈரான் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி கசேமி. இவர் தனது காரின் டேங்கில் தண்ணீரை நிரப்பும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தனது காரை தண்ணீரில் இயக்க முடியும் என்று கூறிவிட்டு, அதற்கு பின்னால் இருக்கும் சயின்ஸ் பற்றியும் அவர் விளக்கமாக கூறுகிறார். கசேமி கூறுகையில், இந்தக் காரின் டேங்கில் 60 லிட்டர் வரை தண்ணீர் நிரப்ப முடியும்.

900 கி.மீட்டர் தூரம் வரை நிற்காமல் பயணிக்கலாம். 10 மணி நேரம் வரை இடைவிடாமல் இயங்கும் திறன் கொண்டது. எரிபொருளோ, வெளிப்புற மின்சாரமோ தேவையில்லை. இந்த வாகனத்தின் என்ஜின் தண்ணீரை ஹைட்ரஜனாகவும், ஆக்சிஜனாகவும் பிரித்து அதில் இருந்து எரிசக்தியை உருவாக்கும். இந்த வேதியியல் மாற்றத்தை பயன்படுத்தி வாகனம் இயங்கும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது

இந்த வாகனம் மாசு எதையும் வெளிப்படுத்தாது. நீராவியை மட்டுமே வெளியேற்றும். இது முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது' என்றார். கசேமி வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவும் நிலையில், இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல, விஞ்ஞான சமூகமும் இதற்கான சாத்தியம் பற்றி ஆழ்ந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

நெட்டிசன்கள் கேள்வி

ஏனெனில், தண்ணீரில் இருந்து ஆக்சிஜனையும், ஹைட்ரஜனையும் பிரித்து எடுப்பது என்பது அதிக ஆற்றல் தேவைப்படும் செயல்முறையாகும். உண்மையில், இந்த செயல்முறையில் ஆற்றல் உற்பத்தி செய்வதை விட, அதை உருவாக்குவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே, அவரது கூற்று வெப்ப இயக்கவியலின் அடிப்படை விதிகளை மீறுவதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

நெட்டிசன்கள் பலரும் வியப்புடன் பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. இவர் கூறுவது உண்மையாக இருந்தால், வாகன போக்குவரத்து துறையில் பெரும் புரட்சியே ஏற்படும் என்று தெரிவித்தனர். சில நெட்டிசன்கள், இந்த கண்டுபிடிப்பு சட்டப்பூர்வமாக செல்லத்தக்கதுதானா? என்றும் கேட்டுள்ளனர்.

நம்பகத்தன்மை கேள்விக்குறி

மற்றொரு நெட்டிசன் கூறுகையில், கடவுள்தான் இவரை காப்பாற்ற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "இந்த நபர் விரைவில் காணாமல் போய்விடுவார்" என்று பதிவிட்டுள்ளார்.

தண்ணீரில் வாகனத்தை இயக்க முடியும் என்று கூறும் வீடியோக்கள் வருவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பாக இந்தியாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர், பைக்கை தண்ணீரில் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். எனினும், அந்த வீடியோவின் நம்பத்தகுந்தமை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+