விஜய் பதவியேற்பு விழா கேன்சல்? யாரும் நாளை வர வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக எம்எல்ஏக்கள் மெசேஜ்
சென்னை: விஜய் நாளை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சென்னை நேரு அரங்கத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. அனால் தற்போது வரை விஜய்யை பதவியேற்க ஆளுநர் ஆர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் நாளை விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறாது என்றே தெரிகிறது. இதனால் விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் யாரும் நாளை சென்னை நேரு ஸ்டேடியம் வர வேண்டாம் என தவெக எம்.எல்.ஏக்கள் தகவல் அனுப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மையை காட்டாததால் ஆளுநர் ஆர்லேகர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. ஏற்கனவே இருமுறை விஜய் ஆளுநரை சந்தித்து இருந்த நிலையில் பெரும்பான்மை இல்லாத போது நான் எப்படி அழைப்பு விடுக்க முடியும் என ஆளுநர் ஆர்லேகர் கூறியிருந்தார்.

இதையடுத்து தான் விஜய் தனக்கான ஆதரவினை பெறுவதற்காக இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்படி கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. இதனால் தவெகவிற்கு இந்திய கம்யூனிஸ்டு 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2, ஏற்கனவே காங்கிரஸ் 5, தவெக 108 என மொத்தம் பலம் 117 ஆக உயர்ந்தது.
இதில் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதாலும், ஒரு எம்.எல்.ஏ சபாநாயகர் என்பதாலும் இன்னும் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. இதனால் தற்போது விஜய்க்கு 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவே விஜய்க்கு உள்ளது. ஆனால் இன்று மாலை விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக விஜய் இன்று மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க உரிமை கோரினார்.
இதனால் நாளை விஜய் முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் பரவின. விஜய் ரசிகர்களும் உற்சாகத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விஜய் பதவியேற்பு விழாவிற்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் தேசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.
ஆனாலும் விஜய்யை ஆட்சி அமைக்க இன்னும் ஆளுநர் ஆர்லேகர் அழைக்கவில்லை. விசிக (2) மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்(2) விஜய்க்கு இன்னும் ஆதரவு அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதனை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெளிப்படையாகவே கூறிவிட்டது. இந்த சூழலில் தான் விஜய்க்கு 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவே உள்ளது எனவும் இதனால் தான் விஜய்யை ஆளுநர் அழைக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நாளை விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறாது என்று கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் யாரும் நாளை சென்னை நேரு ஸ்டேடியம் வர வேண்டாம் என தவெக எம்.எல்.ஏக்கள் தகவல் அனுப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாளை யாரும் சென்னை வர வேண்டாம்.. என தவெக எம்.எல்.ஏக்கள் மெசேஜ் அனுப்பி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications