தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்!
சென்னை: என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த பிரச்சனையும் இல்லை சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது. சசிகலா தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா இல்லையா என்பதை ஓரிரு நாட்களில் தெரிவிப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசிக்க எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றிருக்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது நிறைவடையும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இதற்கிடையே இன்று எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு அமித் ஷாவை சந்திக்க சென்றிருக்கிறார். திடீரென எடப்பாடி பழனிசாமி எதற்காக அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றார் என தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தொகுதிப் பங்கீட்டில் ஏதேனும் பிரச்சனையா? கூட்டணியில் குழப்பமா? என விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "பியூஸ் கோயல் சென்னை வருகிறார் என்று எந்த தகவலும் கிடையாது. செய்தியும் கிடையாது. நான் நேற்றும் உங்களை பார்த்திருக்கிறேன். இன்றும் பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு செய்தியே இல்லை. இப்பொழுது எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று புறப்பட்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார்கள்.
தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த பிரச்சனையும் இல்லை சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது. நான் சென்னை சென்ற பிறகு தான் தொகுதி பங்கீடு பற்றி முடிவு செய்ய முடியும். இன்று மாலை நான் சென்னை புறப்படுகிறேன். எதிரணியில் இருப்பவர்கள் எத்தனை சீட்டு வாங்கி இருக்கிறார்கள் என்று பார்த்து நான் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை.
நாங்கள் எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை இனிதான் முடிவு செய்வோம். எங்கள் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. சசிகலா, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா இல்லையா என்பதை ஓரிரு நாட்களில் தெரிவிப்போம். தமிழக வெற்றிக் கழகத்துடன் நாங்கள் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. பாஜக எங்களோடு கூட்டணிக்கு முயற்சி செய்திருக்கிறார்கள் என்று நடிகர் விஜய் ஏன் கூறுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. தொகுதி பங்கீடு தேசிய ஜனநாயக கூட்டணியில் வெகுவிரைவில் முடிய உள்ளது" எனக் கூறியுள்ளார்.
டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை தலைமையிலான அக்கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முற்பட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "டெல்லி பயணத் திட்டம் குறித்து நாளை (வெள்ளிக்கிழமை) விரிவாக சொல்கிறேன்" எனத் தெரிவித்துவிட்டு சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
-
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி












Click it and Unblock the Notifications