Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிரிச்சிடுங்க".. அதைவிடுங்க, எந்த அடிப்படையில் 'தகுதியான' குடும்ப தலைவிகள் தேர்வு? பாஜக வானதி நறுக்

இந்து அறநிலையத்துறை பள்ளிகள் குறித்து வானதி சீனிவாசன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சீர் மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் முக்கிய வேண்டுகோள் ஒன்றை திமுக அரசுக்கு விடுத்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் 2023 - 24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் நேற்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது... இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டிருந்தார்.

இதில் தமிழக மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மிக முக்கிய அறிவிப்பாக மகளிருக்கான உரிமைத்தொகை அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது...

 புரட்சி திட்டம்

புரட்சி திட்டம்

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று, கடந்த 2 வருட காலமாகவே, பெரும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருந்தது.. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என்று பிடிஆர் அறிவித்தார்.. அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று நிதியமைச்சர் இதுகுறித்து தெரிவித்துள்ளார் என்றும் புரட்சி ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

 1000 ரூபாய்

1000 ரூபாய்

தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் ரேஷன் கார்டுகள் இருக்கிறது... ஆனால் அரசோ வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று அதிமுக இதுகுறித்து கேள்வியை எழுப்பி வருகிறது.. அதுபோலவே, அமமுகவும் கேள்வி கேட்டுள்ளது.. தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன்? என்றுதான் புரியவில்லை என்று கேட்கிறார் டிடிவி தினகரன்.. இதே கேள்வியைதான் தமிழக பாஜகவும் கேட்டு வருகிறது.. இதுகுறித்து வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், முக்கிய குறிக்கோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

 வாக்குறுதி

வாக்குறுதி

அந்த அறிக்கை இதுதான்: தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என, 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் ஆகியும் அதனை நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் இது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி, திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால் வேறு வழியின்றி, வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல், குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்.

அநீதி

அநீதி

ஆனால், அனைவருக்கும் வழங்காமல், தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில், தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்படுவர் என்பது தெரியவில்லை. இத்திட்டத்திற்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் சரிபாதி குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்காது என்று கூறப்படுகிறது. இது நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக இருக்கும். எனவே, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்க வேண்டும்.

சமச்சீர்

சமச்சீர்

தமிழகத்தில் வளர்ச்சி என்பது அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீராக உள்ளது. எனவே, பின்தங்கிய மாவட்டங்கள், விவசாயத்தை மட்டும் நம்பியிருக்கும், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்கென தனி திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமய அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின்கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை

பிரார்த்தனை

திருக்கோயில் நிலத்தில், திருக்கோயில் நிதியில், இந்து அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்பட்ட பள்ளிகளில், இந்து சமய கல்வி இருக்க வேண்டும். மற்ற மத நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில், அந்தந்த மதங்களில் பிரார்த்தனை பாடல்களுடன் பள்ளிகள் துவங்குகின்றன. அதுபோல இந்து கோயில் நிதியில் தொடங்கப்பட்ட பள்ளிகளில், இந்து சமய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். பத்திரப் பதிவு, சொத்து வரி, கலால் வரி, சாலை வரி என, தமிழகத்தின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. ஆனாலும், நிதி, வருவாய் பற்றாக்குறையை குறைத்து காட்டுவதற்காக, அரசு திட்டங்களுக்கான நிதியை குறைத்துள்ளது தெரிகிறது.

 ஏமாற்றம் பட்ஜெட்

ஏமாற்றம் பட்ஜெட்

2023-24-ல் தமிழக அரசு ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 197 கோடியே 93 லட்சம் அளவுக்கு மொத்த கடன் பெற திட்டமிட்டுள்ளதாகவும், இதனால், 31-3-2024-ல், தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 7 லட்சத்து 26 ஆயிரத்து 28 கோடியே 83 லட்சமாக இருக்கும் என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. கடன்களை குறைக்க நடவடிக்கை எடுப்பதுதான் சிறந்த நிர்வாகத்தின் அடையாளம். அதனை திமுக அரசு செய்யவில்லை. மொத்தத்தில் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும், தொலைநோக்கு இல்லாத பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

 திருமா பூரிப்பு

திருமா பூரிப்பு

நேற்றைய தினம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சீர் மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறைகீழ் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. காரணம், ஆதி திராவிட நல விடுதியில் தங்கி, படிக்கும் இத்தகைய மாணவர்களுக்கு உளவியல்ரீதியாக சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், சாதிப் பெயர்களில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே சாதி வேற்றுமையை இது ஏற்படுத்தும் என்பதாலும், ஒரு சாதியைவிட மற்ற சாதியினர் பெரியவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்பதாலும், விசிக தன்னுடைய கவலையை தெரிவித்தபடியே இருந்தது.

 ஹோப் வானதி

ஹோப் வானதி

எனவே, சாதி பெயர் அடையாளங்களை நீக்கி, அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியின் பெயரை சமூக நல பள்ளி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும், ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதிகளை மிகச்சிறந்த கட்டமைப்பு கொண்டதாக மாற்றி, "சமூக நலப் பள்ளிகள்" என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அக்கட்சி தலைவர் திருமாவளவனும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தபடியே இருந்தார்.. நேற்றைய தினம், அதுகுறித்த அறிவிப்பு வெளியானதுமே, முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன், தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். தங்களின் 15 வருட கோரிக்கை, இப்போது நிறைவேறிவிட்டது என்று விசிக எம்பி ரவிக்குமாரும் பூரித்து கூறியிருந்த நிலையில், "இந்து அறநிலையத்துறை"பள்ளிகள் குறித்து பாஜகவின் வானதி சீனிவாசன் விடுத்துள்ள கோரிக்கை கவனத்தை ஈர்த்து வருகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+