Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TNPSC குரூப் 4 தேர்வில் முறைகேடு? எழுந்த சந்தேகம்..“தவறு நடக்க வாய்ப்பே இல்லை” அதிகாரிகள் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். குரூப் 4 மதிப்பெண் கணக்கீட்டு பணிகள் மென்பொருள் மூலம் செய்யப்பட்டு, அதிகாரிகள் மூலம் நேரடி சரிபார்ப்பு நடக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் - 4 தேர்வு நடைபெற்று 8 மாதங்களுக்குப் பிறகு மார்ச் 24ஆம் தேதி முடிவுகள் வெளியான நிலையில், அதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். முடிவுகள் வெளியிட தாமதமானது ஏன் என்பது குறித்தும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

முறைகேடு சந்தேகம்

முறைகேடு சந்தேகம்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளியானது. தாமதமாக தேர்வு முடிவுகள் வெளியானதால் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. குரூப் 4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 2,000 தேர்வர்கள் தேர்ச்சி என தகவல் வெளியாகியுள்ளது. அந்த, குறிப்பிட்ட தேர்வு மையத்தில் பயின்ற விருத்தாச்சலம் மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

ஒரே பயிற்சி மையத்தில்

ஒரே பயிற்சி மையத்தில்

குரூப் 4 தேர்வில் முதல் 11 இடங்களில் ஆறு இடங்களை குறிப்பிட்ட தேர்வு மையத்தில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு பயிற்சி மையத்திலிருந்து அதிக அளவில் தேர்வர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கிற சந்தேகம் பரவலாக தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையே, தங்கள் தேர்வு மையத்திலிருந்து 2,000 பேர் தேர்வானது உண்மைதான் என்று அந்த பயிற்சி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தேர்வான நபர்களின் பட்டியலை அளிக்கவும் தயார் என்றும் முறையான பயிற்சி அளித்து அதிக நபர்களை குரூப் 4 தேர்வில் வெற்றி பெற செய்துள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பே இல்லாத சாதனை

வாய்ப்பே இல்லாத சாதனை

இதேபோல, காரைக்குடியில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் வெற்றி பெற்றிருப்பதும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்வர்கள் சந்தேகம் எழுப்பிய நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வாய்ப்பில்லாத இந்த சாதனை ஐயத்தை ஏற்படுத்துகிறது என ராமதாஸ் தெரிவித்தார்.

உண்மைகள் வெளிவர வேண்டும்

உண்மைகள் வெளிவர வேண்டும்

மேலும், மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருக்கிறது. வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால் அது குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முறைகேடுகள்?

முறைகேடுகள்?

கடந்த 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முதல் 100 இடங்களில் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. நில அளவர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா? என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

நேரடி சரிபார்ப்பு

நேரடி சரிபார்ப்பு

இந்நிலையில், குரூப் 4 தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். Typing பிரிவில் ஒரு lower ஒரு higher வைத்து இருந்து அதிக மதிப்பெண் பெற்று இருந்தாலும், இரண்டுமே higher வைத்து குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை விட தர வரிசையில் பின் தங்கித்தான் இருப்பார்கள். இது தான் typing rank preference என அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். குரூப் 4 மதிப்பெண் கணக்கீட்டு பணிகள் மென்பொருள் மூலம் செய்யப்பட்டு, அதிகாரிகள் மூலம் நேரடி சரிபார்ப்பு நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதிகாரிகள் விளக்கம்

அதிகாரிகள் விளக்கம்

எந்தவிதமான தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் அதிக காலம் எடுத்துக் கொண்டு சரியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இதில் ஏதேனும் குளறுபடிகளோ அல்லது தவறோ நடந்து இருப்பதாக தேர்வர்கள் கருதினால் உரிய ஆதாரங்களோடு [email protected] என்ற இமெயில் மூலமாக புகார் தெரிவிக்கலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+