பாயாசமும் பாலும் மதிமுகவுக்கு இல்லையா? திமுகவின் "ஈரத்துண்டு" அஸ்திரத்தால் நிலைகுலைந்த வைகோ.. ஏன்
சென்னை: திமுக கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.. காங்கிரஸ் இன்று தன்னுடைய முடிவை சொல்லும் என தெரிகிறது.. இந்த சூழலில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அடுத்ததாக என்ன முடிவு எடுப்பார் என்பதுதான் அரசியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், மதிமுகவுக்குள்ளும் கூட்டணி தொடர்பான அதிருப்திகள் வெடிக்க துவங்கியிருக்கிறதாம்..
ஒருகாலத்தில் திமுகவிலிருந்து பிரிந்து தனி கட்சியாக உருவான மதிமுக, பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டதோடு, சில தேர்தல்களில் கூட்டணியிலும் இணைந்துள்ளது.

மதிமுக திமுக கூட்டணி
இப்போது திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதி பங்கீடு நேரத்தில் மதிமுகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற கேள்வி எழுவது வழக்கம். கடந்த காலங்களில் ஒற்றை இலக்க தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்ட அனுபவம் இருந்ததாக மதிமுகவினர் கூறி வந்துள்ளனர்.
வைகோ போன்ற மூத்த தலைவருக்கு குறைந்த தொகுதிகள் வழங்கப்படுவது கட்சியின் மரியாதைக்கு பாதிப்பு என மதிமுக தொண்டர்கள் நினைப்பது இயல்பானதே... இதனால், தொகுதி பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்குமா அல்லது மீண்டும் கருத்து வேறுபாடு உருவாகுமா என்ற கேள்வி எழுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், இது அரசியல் மதிப்பீடு மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பம்பரம் சின்னம்
இங்கே இன்னொரு முக்கியமான விஷயம் சின்னம் தொடர்பானது. மதிமுக தனது பம்பரம் சின்னத்தைத் தக்கவைக்க பலமுறை முயற்சி செய்துள்ளது. சில தேர்தல்களில் கூட்டணி காரணமாக, கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மீண்டும் அப்படியான நிலை வந்தால், கட்சியின் தனித்துவம் குறையும் என்ற கவலை மதிமுகவுக்கு இருக்கிறது. ஒரு கட்சிக்கு அதன் சின்னம் என்பது அடையாளம். அதனை இழப்பது அரசியல் ரீதியாக பலவீனத்தை ஏற்படுத்தும்.
தற்போது ஸ்டாலின் தலைமையில் திமுக வலுவாக உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதும் கவனிக்கப்படும் விஷயமாக உள்ளது. அதே நேரத்தில், வைகோ தனது அரசியல் அனுபவத்தால் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தவர். உடனடி முடிவுகளை எடுப்பவர் அல்ல என்பதும் அவரை நன்கு அறிந்தவர்களின் கருத்து.
துரை வைகோ எதிர்காலம்?
மேலும், தன்னுடைய அரசியல் வாரிசாக கருதப்படும் துரை வைகோவின் எதிர்காலமும் அவருக்குப் பிரதானம். கட்சியின் நிலைப்பாடு உறுதியானதாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்படி முடிகிறது என்பதே அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும்.
சமீபத்தில் நடந்த தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் திமுக காட்டிய மெத்தனப் போக்கு, வைகோவின் விசுவாசத் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 12 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் தனிச் சின்னம் என்ற மதிமுகவின் நியாயமான கோரிக்கைகளுக்குப் பதிலாக, திமுக முன்வைத்துள்ள நிபந்தனைகள் அக்கட்சியைக் கிள்ளி எறியும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
உதயசூரியன் சின்னம் - தொகுதி
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் 4 தொகுதிகள், தனிச் சின்னம் என்றால் வெறும் 3 தொகுதிகள் மட்டுமே என திமுக கறார் காட்டியிருப்பது, மதிமுகவின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
"ஈரத் துண்டு போட்டு கழுத்தறுக்கும் செயல்" என அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பகிரங்கமாகவே விமர்சிக்கவும் தொடங்கியுள்ளது கவனிக்க வேண்டிய விஷயம்..
குறிப்பாக, மதிமுக மாணவர் அணியின் முன்னாள் துணைச் செயலாளர் ரா.சத்தியகுமரன் போன்றவர்களின் சமூக வலைத்தளப் பதிவுகள், தொண்டர்களின் மனக்குமுறலை அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றன.
ஈரோடு கணேசமூர்த்தி
கடந்த கால கசப்பான அனுபவங்களும் தற்போது பேசுபொருளாகியுள்ளன. 2019 மக்களவைத் தேர்தலில் ஈரோடு கணேசமூர்த்திக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடி முதல், 2021 சட்டமன்றத் தேர்தலில் சின்னம் தொடர்பாக இழைக்கப்பட்ட அநீதி வரை அனைத்தையும் தொண்டர்கள் பட்டியலிடுகின்றனர்.
"அடுத்த வீட்டுப் பிள்ளைக்குப் பாலும் பாயசமும் தரும் திமுக, தன்னை நம்பி வந்தவர்களுக்கு வெறும் பச்சைத் தண்ணீரை மட்டுமே தருகிறது" என்ற ஆதங்கம் வைகோவை நோக்கி அழுத்தமாக வைக்கப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் 'செத்தாலும் தனிச் சின்னம் தான்' என்று உறுதியாக நின்று துரை வைகோ வெற்றி பெற்ற போதிலும், சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதே சின்னப் பிரச்சனையைக் கிளப்புவது மதிமுகவை பலவீனப்படுத்தும் தந்திரமாகவே கருதப்படுகிறது.
தற்போது எழுந்துள்ள இந்த நெருக்கடி, வைகோவை ஒரு தீர்க்கமான முடிவை நோக்கித் தள்ளியுள்ளது. எனவே "உதயசூரியன் நிழலில் ஒதுங்கி வாழ்வதா அல்லது தனிப்பாதை அமைத்துத் தனது அரசியல் ஆளுமையை நிரூபிப்பதா?" என்ற கேள்விக்கு விடை காண வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.
புதிய அரசியல் கூட்டணி?
வைகோவுக்குத் தொகுதி குறைக்கப்பட்டால், அது வெறும் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு இயக்கத்தின் தன்மானம் தொடர்பான விவகாரம். திமுகவின் மேலாதிக்க அரசியலை சகித்துக் கொண்டு வைகோ அமைதி காப்பாரா அல்லது தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவாரா என்பதே இப்போதைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு.
இதற்கிடையில், அரசியல் வட்டாரங்களில் இன்னொரு கேள்வியும் பேசப்படுகிறது. மதிமுக தனியாக போட்டியிட்டால் அதன் வாக்கு வங்கி எவ்வளவு தாக்கம் செலுத்தும் என்பது தெளிவாக கணிக்க முடியாத ஒன்று... சில மாவட்டங்களில் கட்சிக்கு உறுதியான ஆதரவு இருந்தாலும், மாநிலம் முழுவதும் வெற்றி பெற போதுமான வலிமை உள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது... அதனால் தான் கூட்டணி அரசியல் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.
திமுக - மதிமுக
அதே நேரத்தில், திமுகவும் கூட்டணியை உடைக்க விரும்பாது என்பதே பலரின் கணிப்பாகும்.. சிறிய கட்சிகளின் வாக்கு வித்தியாசம் கூட சில தொகுதிகளில் தீர்மானிப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்... எனவே இரு தரப்பும் தங்கள் அரசியல் கணக்குகளை மிக கவனமாக போட வேண்டிய நிலை உள்ளது.
இதனால், வரும் மாதங்கள் மிகவும் முக்கியமானவை. தொகுதி எண்ணிக்கையா முக்கியம், அரசியல் அடையாளமா முக்கியம் என்ற தேர்வின் முன் மதிமுக நிற்கிறது. அனுபவமும், அரசியல் நுணுக்கமும் கொண்ட வைகோ எந்த பாதையை தேர்வு செய்கிறார் என்பதே தமிழக அரசியலில் அடுத்த அலை எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும்.
-
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications