நிதி ஒதுக்காத மத்திய அரசு.. கடுமையான நிதி நெருக்கடியில் சென்னை மெட்ரோ.. முடங்கும் 2ம் கட்ட பணிகள்
சென்னை: சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு நிதி எதுவும் ஒதுக்காத நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கு மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் பிளான் செய்யப்பட்ட நிலையில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டு உள்ளது. இதனால் 40 சதவிகிதம் பட்ஜெட் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இரண்டாம் மெட்ரோவின் மொத்த பட்ஜெட் 63,246 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். மத்திய அரசு இதற்கு நிதி ஒதுக்குவதாக கூறிவிட்டு, ஒதுக்காத நிலையில் மெட்ரோ பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2 திட்டம் மாநில அரசு திட்டமாக செயல்படுத்தப்படுவதால், மத்திய அரசு இதற்கு நிதி தர முடியாது என்று கூறி கைகழுவி உள்ளது. நாடாளுமன்றத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் டோகன் சாஹு, இந்தத் திட்டத்திற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் விளைவாக, 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில், மத்திய அரசு எந்த நிதியையும் வழங்கவில்லை. இனியும் வழங்க முடியாது என்று அறிவித்து உள்ளார். தயாநிதி மாறனின் கேள்விகளுக்குப் பதிலளித்த சாஹு, அதிக செலவில் உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது சாத்தியக்கூறு மற்றும் வளங்களின் இருப்பைப் பொறுத்தது. 63,246 கோடி மதிப்பீட்டில் 118.9கிமீ வழித்தடத்தை தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ளது. சென்னை மெட்ரோ கட்டம்-2 க்கு 63,246 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது, சென்னை மெட்ரோ கட்டம்-2 திட்டம் மாநிலத் துறை திட்டமாக செயல்படுத்தப்பட்டு, அதைச் செயல்படுத்துவதற்கான செலவினம் தற்போது மாநில அரசால் ஏற்கப்படுகிறது, என்றார். முதல் கட்ட திட்டத்திற்கு மட்டுமே நாங்கள் நிதி கொடுத்தோம். இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க முடியாது என்று அறிவித்து உள்ளார்.
கைவிரிப்பு: சென்னை, மதுரை, கோயம்புத்தூருக்கு அமைக்கப்பட உள்ள மெட்ரோவிற்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காமல் தமிழ்நாடு அரசை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. அதிலும் கோவை, மதுரையில் முழுமையான டிபிஆர் ரிப்போர்ட் அளிக்கப்பட்ட பின்பும் அங்கே பணிகளை தொடங்க அரசு இன்னும் அனுமதிக்கவில்லை. சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு இதுவரை தமிழக அரசுக்கு மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை.
ஏசியன் வங்கி உள்ளிட்டசர்வதேசவங்கிகளின் உதவியுடன் தமிழக அரசு மெட்ரோ அமைத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேத்துப்பட்டு பகுதியில் பூமிக்கடியில் துளையிடுவதற்கு எல்&டி நிறுவனம் சிறுவாணி எனும் பிரமாண்ட துளையிடும் பணியினை முடித்து உள்ளது. 11 மாதப் பயணம் முடிந்து வெற்றிகரமாக பணியை முடித்தது 'சிறுவாணி' இயந்திரம்.
மெட்ரோ பணம்; உத்தர பிரதேசம் போன்ற முன்னேறாத மாநிலங்களில் 7 மெட்ரோ சேவைகள் உள்ள நிலையில் பொருளாதாரத்தில் 2ம் இடத்தில் தமிழ்நாட்டிற்கு, புதிய மெட்ரோ சேவைகளை தொடங்க இன்னும் மத்திய அரசு அனுமதி அளிக்காமல் உள்ளது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டியும் கூட இதற்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை.
சென்னை மெட்ரோ 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் பணத்தில்தான் கடன் வாங்கி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மத்திய அரசு அனுமதி தராத காரணத்தால் மதுரை, கோவை மெட்ரோ என்று இரண்டு திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications