"மன்றாடிக் கேட்கிறேன்.. இனி ஒரு உயிரும் போகவேண்டாம்” சிவா திலீபன் மறைவால் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
சென்னை: "மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது" என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்த சிவா திலீபன் உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்து மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மார்ச் 12 ஆம் தேதி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் போராட்டம் நடந்தது.

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிவா திலீபன், 'தமிழ் வாழ்க' என முழங்கியவாறு திடீரென ரயில் முன் பாய்ந்தார். இதனால் பலத்த காயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிவா திலீபன் (56) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின்போது, ரயிலில் அடிபட்டு தீவிர சிகிச்சையில் இருந்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு ரயில் முன் பாய்ந்த சகோதரர் சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது.
மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்!
இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் - தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications