சாரி! போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்! ஆடியோ லாஞ்ச் ரத்தான நிலையில் போலீசுக்கு லியோ படக்குழு கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 30ம் தேதி நடக்க இருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்படும் நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என சென்னை பெரியமேடு காவல் நிலையத்துக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லியோ. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் என்பது அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பணிகளை திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழு மேற்கொண்டு வருகிறது.

No need of police protection, Vijays Leo team writes letter to Chennai Police after Audio launch cancelled

மேலும் படத்தை ப்ரோமோட் செய்யும் பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றன. இதையடுத்து லியோ திரைப்படத்துக்கான ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து செப்டம்பர் 30ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. பொதுவாக இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பங்கேற்று கூறும் கருத்துகள், அவர் கூறும் குட்டி கதைகள் என்பது பெரிய அளவில் பேசும் பொருளாகும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் அவர் என்ன பேச போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

மேலும் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல்கள் பரவுகின்றன. இதனால் அவர் அரசியல் சார்ந்த கருத்துகளை முன்வைப்பாரா? இல்லையா? என்ற கேள்விகளும் எழுந்தன. இதற்கிடையே தான் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்டுடியோ நிறுவனம் திடீரென்று அறிவித்தது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‛‛பாஸ் கோரிக்கைகள் அதிகரிக்கின்றன. இதனால் பாதுகாப்பு கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம்'' என்று முடிவு செய்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் இப்படி கூற விஜய் ரசிகர்கள் அரசியல் அழுத்தம் உள்பட வேறு சில காரணங்களை கூறி வருகின்றனர். இதனால் லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து என்பது பேசும் பொருளாக உள்ளது.

இந்நிலையில் தான் தற்போது லியோ பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்டுடியோ சார்பில் சென்னை பெரியமேடு காவல் நிலையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ‛‛30ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ ஆடியோ லாஞ்ச் நடத்த போலீஸ் பாதுகாப்பு கேட்டு இருந்தோம். தற்போது அந்த நிகழ்ச்சி ரத்தாகி உள்ளது. இதனால் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம். சிரமத்திற்கு மன்னிக்கவும்' என Sorry கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றால் பாதுகாப்பு கோரி போலீசாரிடம் அனுமதி கேட்க வேண்டும். அதன்படி தான் லியோ ஆடியோ லாஞ்ச்சுக்கும் போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டு இருந்தது. தற்போது அது ரத்தாகி உள்ளதை தெரிவிக்கும் வகையில் போலீசாருக்கு லியோ தயாரிப்பு நிறுவனம் கடிதம் எழுதி உள்ளது. இது வழக்கமான ஒரு நடைமுறை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+