மக்கள் மனம் கல்லா? ஒருத்தரும் காப்பாத்தல.. வீடியோ தான் எடுத்தாங்க.. ப்ரீத்தியின் சகோதரர் கண்ணீர்!
சென்னை: சென்னை அடையாறு இந்திரா நகர் ரயில் நிலையத்தில் கொள்ளையர்கள் செல்போன் பறித்த போது ரயிலில் இருந்து விழுந்த மாணவி பிரீத்தி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரீத்தி அடிபட்டு கிடந்த போது யாரும் காப்பாற்ற வரவில்லை என்று தனது ஆதங்கத்தை மாணவியின் சகோதரர் வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கடந்த 2 ஆம் ஆம் தேதி பயணம் செய்து கொண்டு இருந்த கல்லூரி மாணவி பீர்த்தியிடம் கொள்ளையர்கள் செல்போனை பறித்தனர். அப்போது ரயிலில் இருந்து விழுந்த மாணவி படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கடந்த ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் ரயில்வே போலீசார், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பழைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பெயர்களையும் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சென்னை பட்டினப்பாகத்தை சேர்ந்த விக்னேஷ், அடையாரை சேர்ந்த மணிமாறன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் தான் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து மாணவியின் செல்போனும் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறு இந்திரா நகர் ரயில் நிலையத்தில் கடந்த 2 ஆம் தேதி கொள்ளையர்கள் செல்போன் பறித்த போது ரயிலில் இருந்து விழுந்த மாணவி பிரீத்தி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரீத்தி அடிபட்டு கிடந்த போது யாரும் காப்பாற்ற வரவில்லை என்று தனது ஆதங்கத்தை மாணவியின் சகோதரர் வெளிப்படுத்தியுள்ளார்.

வீடியோ தான் எடுத்தாங்க: பெண்ணின் சகோதர் குபேந்திரன் கூறும் போது, "எனது தங்கை கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடந்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் உயிருக்கு போராடிய போதும் மக்கள் வீடியோ எடுத்து சென்றார்களே தவிர காப்பாற்ற வரவில்லை. என் கோபம் குற்றவாளிகளை விட இவர்கள் மீதுதான் உள்ளது. வேடிக்கை பார்தவர்களின் வீட்டு பெண் என்றால் அவர்கள் இப்படி செயல்படுவார்களா? மக்கள் மனது ஏன் இப்படி கல்லாக மாறிவிட்டது.
ரயில் நிலையங்களில் கேமரா இல்லை. ரயில் நிலையத்திற்கு வெளியே ஒரு கேமரா இருந்தால் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்து இருக்காது. என் தங்கை அடிபட்டு ஒருவாரம் ஆகிய பிறகு இப்போதுதான் குற்றவாளியை பிடித்து இருக்கிறார்கள்" என்றார். ஆட்டோ ஓட்டுநரான மாணவி பிரீத்தியின் தந்தை கூறுகையில், " என் பொண்ணுக்கு நடந்தது போல வேறு யாருக்கும் நடக்கக் கூடாது.

ரயில் நிலையத்தில் கேமரா இல்லை: அடுத்த வருடம் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருந்தோம். மிகவும் கஷ்டப்பட்டு தான் படிக்க வைத்தேன். ரயில் நிலையத்தில் கேமரா வைக்க வேண்டும். மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் கேமரா உள்ளது. அதன்பிறகு வேளச்சேரியில் தான் உள்ளது. இதற்கு நடுவில் இருக்கும் எந்த ரயில் நிலையத்திலும் கேமரா இல்லை" என்றார். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததே இத்தகைய குற்றங்கள் நடப்பதற்கு காரணம் என்று பயணிகள் தரப்பிலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
பிரம்மாண்டமாக காணப்படும் ரயில் நிலையங்களில் பெரும்பாலானவற்றில் போலீசாரும் பாதுகாப்புக்கு இல்லை.. கேமராக்களும் இல்லை. எனவே இதை பயன்படுத்திக் கொண்டு சட்ட விரோத செயல்கள் அதிகம் நடப்பதாகவும் பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது. ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே நிர்வாகம் உரிய நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications