எந்தக் கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது.. ஆவேசமாக வெடித்த அமைச்சர் துரைமுருகன்!
சென்னை: எந்தக் கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிச்சயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என உறுதிபடத் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து வருகிறார்.

அமைச்சர் துரைமுருகன் பேச்சு
அந்தவகையில், நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், நதி நீர் பிரச்சனைக்காக 22 வழக்குகள் தொடர்ந்துள்ளோம் என்றும் காவிரிக்கு 9, முல்லை பெரியாறுக்கு 9, பாலாறுக்கு 2 ஆகிய வழக்குகளுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்கிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், "மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்தனர். காவிரி ஆணையத்திற்கு மேகதாது குறித்து பேச உரிமை கிடையாது என்றோம். நம் எதிர்ப்பால் திட்ட அறிக்கையை காவிரி ஆணையம் திருப்பி அனுப்பிவிட்டது. தமிழ்நாட்டின் அனுமதியின்றி காவிரியில் எந்த அணையும் கட்ட முடியாது என மத்திய வனத்துறை தெரிவித்து விட்டது" என்று தெரிவித்தார்.
எந்தக் கொம்பனாலும்
தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "தமிழ்நாடு அரசின் முழு சம்மதத்தை பெற்றால் தான் மேகதாது அணை கட்ட முடியும். எந்தக் கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், நதிநீர் விவகாரத்தில் அண்டை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் காரியம் கெட்டுப்போகும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து உள்ளார்.
அதனை தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி உதயகுமார், தமிழ்நாட்டில் இருந்து நாள் தோறும் லாரிகள் மூலம் ஓசூர் வழியாக இயற்கை வளங்கள் கடத்தி செல்லப்படுவதாகவும், அவற்றை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஆர்பி உதயகுமார் கேள்விக்கு பதில்
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், '' அண்டை மாநிலங்களுக்கு கனிமங்களை எடுத்து செல்லக்கூடாது என்று ஒருவர் வழக்கு போட்டார். அதில் தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. எல்லையில் எல்லா சோதனையும் செய்த பிறகு கனிமங்கள் கொண்டு செல்லப்படுகிறது. சட்டத்திற்கு உட்பட்டு தான் அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக கூறுவது தவறு. கனிமங்களுக்கான உரிமைத்தொகை, பசுமைத்தொகை ஆகியவற்றை செலுத்திய பின்பு தான் கனிமங்களை எடுத்துச் செல்ல முடியும். அரசின் அனுமதியோடு தான் அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக கூறினார்.
ஒரு சிறிய கல்லை கூட
மேலும், ட்ரோன் மூலம் குவாரிகளை ஆய்வு செய்து அனுமதியின்றி கனிமங்களை வெட்டி எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மணல் விலைவாசி ஏறியுள்ளது. இதை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.
எம் சாண்ட் விலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக கனிமங்களை எடுத்துச் சென்றதாக இதுவரை 21 ஆயிரத்து 163 லாரிகள் பிடிபட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் அனுமதியின்றி ஒரு சிறிய கல்லை கூட அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது" என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications