“எந்த கொம்பனாலும் இங்கு சிறு பதற்றத்தைக் கூட உருவாக்க முடியாது!” வட மாநிலத்தவர் விவகாரம்! மா.சு அதிரடி
வட இந்தியர்கள் விவகாரத்தில் சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்.
சென்னை: தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக வதந்திகளைச் சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருவதாகத் தெரிவித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், இங்கு எந்த கொம்பனாலும், தமிழ்நாட்டில் சிறு பதற்றத்தைக் கூட உருவாக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாகவே வட மாநிலங்களில் இருந்து தொடர்ச்சியாகப் பலரும் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு ஊதியம் அதிகம் வேலையும் கிடைக்கும் என்பதாலேயே அவர்கள் இங்கு வருகிறார்கள்.
கொரோனா காலத்தில் இங்கிருந்து சென்றவர்களும் கூட இப்போது மீண்டும் திரும்பி வருகின்றனர். இதற்கிடையே சில நாட்களாக இங்கு வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாகப் பொய்யான தகவல்கள் பரவின.

வட மாநிலத்தவர்
தமிழ்நாட்டில் கட்டிட வேலை, ஹோட்டல் வேலை உள்ளிட்ட வேலைகளில் தமிழக இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த வேலைகளுக்கு பெரும்பாலும் வட மாநில இளைஞர்களை பணியமர்த்தப்படுகிறார்கள். இதனால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு எதுவும் பாதிக்கப்படுவதில்லை என்று தமிழக வணிகர்களும் கூட தொடர்ந்து கூறி வருகின்றனர். இங்கு வாழும் வட மாநில இளைஞர்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.

வதந்தி
இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே இணையத்தில் திட்டமிட்டு பொய்யான தகவல்களைச் சிலர் பரப்பி வருகின்றனர். அதாவது பழைய சம்பவங்களையும் வேறு ஏதோ மாநிலங்களில் நடந்த சம்பவங்களையும் ஏதோ தமிழ்நாட்டில் இப்போது நடந்ததை போலப் பொய்யான தகவல்களைப் பரப்பினர். குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்தி பேசியதாலேயே வட மாநிலத்தவர் கொல்லப்பட்டதாக எல்லாம் பொய்யான தகவல்களைப் பரப்பினர். இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசும் பீகார் அரசும் தொடக்கம் முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மேலும், சம்மந்தப்பட்ட தகவல்களை வலைத்தளங்களில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவல்களைப் பரப்பியவர்களைப் பிடிக்கத் தமிழக போலீசார் பீகார் மற்றும் டெல்லிக்கும் விரைந்துள்ளனர். இந்த விகாரம் தொடர்பாக வட மாநிலங்களின் குழுக்களும் தமிழ்நாடு வந்துள்ளனர். அவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் ஆலோசனையும் நடத்தி வருகின்றனர். இதனிடையே பொய்யான தகவல்களைப் பரப்பி, தமிழ்நாட்டில் சிறு பதற்றத்தைக் கூட உருவாக்க முடியாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நமது முதல்வர் வெளிமாநில தொழிலாளர்களுக்குச் சிறு அளவில் கூட பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு வேலை கூட பட்டினியாக இருக்கக் கூடாது என்று நினைத்தவர் முதல்வர்.. கொரோனா காலத்தில் அவர்களுக்கு இலவசமாக உணவு தயார் செய்து கொடுக்க ஏற்படு செய்யப்பட்டது.. அந்த உணவு தயார் செய்து தரும் இடத்தை முதல்வரே நேரடியாகவும் கூட ஆய்வு செய்துள்ளார்.

மனிதநேய மிக்கவர்
அப்போது கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு அவரே உணவும் பரிமாறினார். வெளிமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டே கிளம்பினார்.. அதேபோல வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப ரயில்கள் இயக்கப்பட்ட போது, அவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்படும் என்று முதலில் அறிவித்தவரும் முதல்வர் ஸ்டாலின் தான். அந்தளவுக்கு மனிதநேயமிக்க முதல்வர் நமது முதல்வர் அவரது ஆட்சிக்குக் களங்கத்தை ஏற்படுத்தச் சிலர் முயல்கிறார்கள்.

எந்த கொம்பனாக இருந்தாலும்
வட மாநில தலைவர்களை நமது முதல்வர் ஒருங்கிணைத்துள்ளார். வட மாநில தலைவர்களை இங்கு வந்து நமது முதல்வர் பாராட்டிச் சென்றுள்ளனர்.. இதைக் கண்டு பொறாமை கொண்ட சிலர் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இது அனைத்தையும் நாங்கள் எதிர்கொள்வோம். சமயம், சாதி, மதங்களைக் கடந்து தமிழ்நாட்டில் அனைவருமே அண்ணன் தம்பிகளாகவே வாழ்ந்து வருகிறோம். இங்கு எந்த கொம்பனாலும், தமிழ்நாட்டில் சிறு பதற்றத்தைக் கூட உருவாக்க முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications