'மயானம் தவிர'.. யாருக்கும் உரிமை இல்லை.. சென்னை ஹைகோர்ட் உத்தரவால் பரபரப்பு
சென்னை: மயானம் என அரசு அறிவித்துள்ள பகுதிகளில் மட்டுமே உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேறு எந்த பகுதியிலும் அடக்கம் செய்ய எவருக்கும் உரிமை இல்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
திருவள்ளூரைச் சேர்ந்த பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் , மயானம் என அறிவிக்கப்படாத பட்டா நிலத்தில் நரசிம்மலு என்பவரின் உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினார்
. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பட்டா நிலத்தில் புதைக்கப்பட்ட நரசிம்மலு உடலை தோண்டி எடுத்து மயானத்தில் புதைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஜெயச்சந்திரன் மற்றும் முகமது சபீக் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து விதிகளின்படி, மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தான் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்த னர்.
எனவே, விதிகளுக்கு முரணாக அடக்கம் செய்யப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து, மயானத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு காரணமாக மயானம் என்று அறிவிக்கப்படாத பகுதிகளில் புதைக்கப்பட்ட உடல்கள், தோண்டி எடுத்து மயானத்தில் புதைக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
இந்த உத்தரவை பார்த்த நெட்டிசன்கள் சிலர், மயானம் என்று அறிவிக்கப்படாத பகுதிகளில் புதைக்கப்பட்ட உடல்களை கண்டிப்பாக தோண்டி எடுத்து மயானங்களில் புதைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications