கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை- பாஜக மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்டாக்
சென்னை: தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளை சுட்டுப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம் என்று பாஜகவினரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
தேசப் பிதா மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட 75-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்துத்துவா தீவிரவாதியான நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

கோட்சே ஆதரவு
இப்போது நாதுராம் கோட்சேவுக்கு ஆதரவாக பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் சத்தீஸ்கரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா சாமியார் காளிசரண் மகாராஜ், காந்தியடிகளை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு என் வீரவணக்கங்கள், நாதுராம் கோட்சேதான் உண்மையான மகாத்மா என பேசியது சர்ச்சையானது. இதனையடுத்து காளிசரண் மகாராஜ் மீது சத்தீஸ்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்தது. மேலும் ம.பி.யில் தலைமறைவாக பதுங்கி இருந்த காளிசரண் மகாராஜையும் கைது செய்தது சத்தீஸ்கர் போலீஸ்.

சென்னையில் அரசு மரியாதை
இதனிடையே மகாத்மா காந்தியடிகளின் 75-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மெரினாவில் உள்ள காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்ட படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இன்று மரியாதை செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு ட்விட்டர் பதிவை பதிவிட்டுள்ளார். அதில், மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் கருத்து
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த ட்விட்டர் பதிவில் நெட்டிசன்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். @Arasu89104743 என்பவர், காந்தி இறக்கவில்லை ஆர்எஸ்எஸ் அமைப்பால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவின் முதல் தீவிரவாத அமைப்பு ஆர்எஸ்எஸ் முதல் தீவிரவாதி கோட்சே. வரலாற்றை ஒருபோதும் மறக்கமாட்டோம் என எழுதியுள்ளார். @siddiq003 என்பவர், இந்தியாவின் முதல் தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ், காந்தியை படுகொலை செய்த நாள் இன்று.. என குறிப்பிட்டுள்ளார். @Saravan93579536 என்பவர், தீமையான கொள்கைகளை தாங்கி, செயல்களையாற்றி, தீமையே போதிக்கும், சமூக நல்லிணக்கத்தை, ஒற்றுமையை, சீர்குலைக்கும் கோட்சே கூட்டத்தை ஒழிப்போம் என பதிலளித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications