Hindi: மொழிப் போர் தியாகிகள் தினம்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை! ஸ்டாலின் உறுதி!
சென்னை: "அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை" என மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி மூலக்கொத்தளத்தில் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மொழிப்போர் தியாகிகள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் மூலக்கொத்தளத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தினர்.

இதற்காக கருப்பு உடை அணிந்துக் கொண்டு ஊர்வலமாக தியாகிகள் நினைவிடத்திற்கு வந்தனர். அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் வீர வணக்கம் வீரவணக்கம் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் என முதல்வர் ஸ்டாலின் முழங்கினார்.
இதையடுத்து மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோரின் நினைவிடத்தில் அவர்களது புகைப்படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!
மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 25, 2026
மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.
இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித்… pic.twitter.com/EmVm1TqTXy
இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.
தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.
மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! என்றார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications