டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் வாய்ப்பில்லை.... சசிகலா செய்தது சட்டப்படி குற்றம் - ஜெயக்குமார் நச்
டிடிவி தினகரன் தான் செய்ததெல்லாம் தவறு என்று கடிதம் எழுதிக் கொடுத்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள பரிசீலிக்கப்படும் என்று சொன்னது அவருடைய சொந்தக்கருத்து கட்சியின் கருத்து கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் மன்னிப்புக்கடிதம் கொடுத்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறியுள்ளது அவருடைய சொந்தக்கருத்து கட்சியின் கருத்து கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவில் டிடிவி தினகரனுக்கு வாய்ப்பில்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அதிமுகவில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக தன்னை அறிவித்துக்கொண்டார் சசிகலா. முதல்வராக அவர் நினைத்தாலும் விதி அவரை சிறைக்கு அனுப்பியது. சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர் செல்வம். 11 எம்எல்ஏக்கள் அவர் பின்னால் சென்றனர் என்றாலும் ஆட்சிக்கு பாதிப்பு வரவில்லை.
சிறைக்கு செல்லும் முன்பாக டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக நியமித்தார் சசிகலா. ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று சபதம் செய்து விட்டு சிறைக்கு போனார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெற்றாலும் டிடிவி தினகரன் அதிகாரம் செலுத்தினார். அதன் பிறகு நடந்த சம்பவங்கள் அவரே எதிர்பாராதது. அதிமுகவில் இருந்து கழற்றி விடப்பட்டார் டிடிவி தினகரன்.

தினகரன் தனி ஆவர்த்தனம்
ஆர்.கே. நகர் சட்டசபைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார் டிடிவி தினகரன். அவர் தனியாக கோஷ்டி சேர்க்கவே சில எம்எல்ஏக்கள் அவர் பின்னால் சென்றனர்.

அதிமுக ஆட்சி தப்பியது
பிரிந்து போன ஓ. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணைந்தனர். டிடிவி தினகரன் பின்னால் சென்ற எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிமுக பல தொகுதிகளில் வெற்றி பெறவே ஆட்சி தப்பியது.

காரில் கட்சிக்கொடி கட்டிய சசிகலா
அதிமுக ஆளுங்கட்சியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நான்காண்டு கால ஆட்சி முடிவடைந்து விட்ட நிலையில் சசிகலாவும் சிறையில் இருந்து விடுதலையாகிவிட்டார். ஆரம்பமே அமர்களம் என்பது போல ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கட்சி கொடியை கட்டியிருக்க நன்றாக இருக்கிறேன் என்று சைகையில் சொன்னவாரே சென்றார். சசிகலா இன்னமும் அதிமுக பொதுச்செயலாளர்தான் என்று டிடிவி தினகரன் பேட்டி கொடுத்தார்.

கட்சிக்கொடியை பயன்படுத்தலாமா
சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்பாகவே பல பரபரப்பான செய்திகள் வெளியான நிலையில் இது வெளியே வந்த முதல் நாளிலேயே பரபரப்பை கிளப்பி விட்டார். அதிமுக கட்சிக்கொடியை கட்டியது சட்ட விரோதம் என்று அமைச்சர் சிவி சண்முகம் கூறியிருக்கிறார். அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை கட்சி சார்பில் இன்னமும் யாரும் தொடங்கவில்லை.

டிடிவி தினகரனுக்கு மன்னிப்பு
இந்த நிலையில் சசிகலாவை கடுமையாக எதிர்த்த கே.பி முனுசாமி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கட்சியில் இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது. டிடிவி தினகரன் , தான் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டு மன்னிப்பு கடிதம் அளித்தால் அவரை அதிமுகவில் இணைக்க தலைமை பரிசீலனை செய்யும் என்றார்.

அது வேற வாய்
இதே கே.பி முனுசாமிதான் சசிகலா வெளியே வந்தால் கட்சி 4 ஆக உடையும் என்கிறார்கள். ஸ்லீப்பர் செல் இருப்பதாக கூறுகின்றனர். அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கடந்த மாதம் கூறினார். சசிகலா வெளியில் வந்தாலும் ஒன்றும்ஆகப்போவதில்லை. யாரும்அங்கு செல்லப்போவதில்லை. நமக்குள் குழப்பம் ஏற்படுத்த பலர் முயற்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார். இந்த நிலையில் டிடிவி தினகரனை கட்சியில் இணைக்க பரிசீலனை செய்யும் என்று தெரிவித்தது அதிமுக தொண்டர்கள் பலரை அதிர்ச்சியடைய வைத்தது.

பதிலடி கொடுத்த ஜெயக்குமார்
சட்டசபைக் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளார்களிடம் பேசும் போது, கேபி முனுசாமி கருத்து பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். டிடிவி தினகரன் பற்றி கே.பி முனுசாமி சொன்னது அவரது சொந்த கருத்து. கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வந்தால் மட்டுமே அது கட்சியின் கருத்தாக இருக்கும் என்று சொன்னார்.

சட்டப்படி குற்றம்
சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்பட எந்த பதவியிலும் இல்லை. அப்படி இருக்கும் போது, சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டப்படி குற்றம், அவர் வேறு கட்சியில் இருக்கிறார். அதிமுக கொடியை பயன்படுத்திய அவர் மீது சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications