கடைசி வரை கண்டுக்காத பாமக.. அதிமுகவிற்கு வேற வழியே இல்லை.. 40 தொகுதியிலும் இரட்டை இலைதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் 40 தொகுதியிலும் இரட்டை இலை சின்னம்தான் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

2024 லோக்சபா தேர்தலுக்காக ஆளும் திமுக தீவிரமாக பணிகளை செய்து வருகிறது. லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுக - காங்கிரஸ் இடையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. பிப்ரவரி 3,4ஆம் தேதிகளில் கூட்டணி கட்சியில் உள்ள மற்ற கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்த உள்ளது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுடன் திமுக கூட்டணி குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.

No PMK in alliance: AIADMK to run in all 40 seats of Tamil Nadu in Lok Sabha election 2024

திமுக டீம்:நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய குழு அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய உள்ள குழுவில் குழு தலைவராக டி.ஆர்.பாலு (கழகப் பொருளாளர்) நியமிக்கப்பட்டு உள்ளார்.

குழு உறுப்பினர்கள் : கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்), இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) , எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதிமுக பிளானிங்: அதிமுக ஆலோசனை: இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனைகளை அதிமுக தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளது.

லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக நேற்று ஆலோசனை செய்யப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை செய்தது.

கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை செய்தனர். அதாவது யாருடன் கூட்டணி வைக்கலாம்.. யாருடன் கூட்டணி வைக்க கூடாது.. எத்தனை இடங்கள் கொடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

யாரும் பங்கேற்கவில்லை: ஆனால் லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக நேற்று அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை.

கூட்டணி: அதிமுக அதிகம் எதிர்பார்த்த பாமகவும் இந்த கூட்டணியில் பங்கேற்கவில்லை. கடந்த லோக்சபா தேர்தலை இவர்கள் ஒன்றாக எதிர்கொண்டார்கள். அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலிலேயே இவர்களின் கூட்டணி முறிந்துவிட்டது.,

அதன்பின் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று பாமக கூறி வருகிறது. இந்த நிலையில்தான் பாமக நேற்று கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் பெரும்பாலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் 40 தொகுதிகளிலும் போட்டியிடும், புதிய பாரதம் உள்ளிட்ட சிறிய கட்சிகள் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.

பாஜக மூன்றாவது அணி; இந்த நிலையில்தான் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + பாமக + தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+