சொத்து இல்லை.. அடமானம் இல்லை.. ஆனாலும் ரூ.2.7 லட்ச கடன்.. இந்திய இளைஞர்கள் சிக்கிய மாய வலை?
சென்னை: இன்றைய இளைஞர்கள் கையில் காசு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கடன் வாங்கியாவது ஆசைப்பட்டதை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.. இது உலகம் முழுக்க இருக்கும் ஒரு டிரெண்ட் என்றாலும், இந்தியாவில் இது இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.. ஆம், நாட்டின் முன்னணி ஆய்வு நிறுவனமான சி.ஆர்.ஐ.எப். ஹைமார்க் கொடுத்துள்ள புதிய ரிப்போர்ட், இந்திய இளைஞர்கள் எந்தளவுக்கு கடன் வலையில் சிக்கியிருக்கிறார்கள் என்பதைப் புட்டுப் புட்டு வைத்துள்ளது..
.ஆர்.ஐ.எப். ஹைமார்க் தந்துள்ள புதிய ரிப்போர்ட்டின்படி, இந்தியாவில் கடன் வாங்குபவர்களில் 23 சதவீதம் பேர் 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் தான்.. கடந்த 2021-ல் 4 கோடியாக இருந்த இவர்களின் எண்ணிக்கை, இப்போது 6.6 கோடியாக எகிறியுள்ளது..

புதிய கடன்கள்
அதாவது, 4 வருடத்தில் 65 சதவீதம் பேர் கூடுதலாகக் கடன் வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.. குறிப்பாக 2025-ல் கொடுக்கப்பட்ட புதிய கடன்களில் பாதியளவு இளைஞர்களுக்குத் தான் போயிருக்கிறது..
இளைஞர்கள் வாங்கும் கடன்களில் ஒரு பெரிய ஆபத்து ஒளிந்திருக்கிறது.. அவர்கள் வீடு கட்டுவதற்கோ அல்லது எதிர்காலச் சொத்துக்கோ கடன் வாங்குவதில்லை.. மாறாக, செல்போன், லேப்டாப் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கவே அதிகம் கடன் வாங்குகிறார்கள்.. இதில் 29.3 சதவீதம் பேர் தனிநபர் கடனையும், 15.5 சதவீதம் பேர் கிரெடிட் கார்டு கடனையும் நம்பியிருக்கிறார்கள்.
அடமானம், சொத்து இல்லாமல் கடன்
அடமானம் எதுவும் இல்லாமல் வழங்கப்படும் இத்தகைய கடன்களுக்கு வட்டி மிக மிக அதிகம்.. இந்த வட்டிப் பொறி தெரியாமலேயே இளைஞர்கள் இதில் விழுகிறார்கள்..
ஒரு இளைஞரின் சராசரி கடன் தொகை 2.7 லட்சமாக இருக்கிறது.. ஒரு கடனை அடைக்கத் தெரியாமல், அதைத் தீர்ப்பதற்காக இன்னொரு கடன் எனத் தொடர்ச்சியாகக் கடன் வாங்கும் பழக்கம் இவர்களிடம் அதிகரித்துள்ளது.. இப்படித் தொடர்ந்து கடன் வாங்குவதால், அவர்களின் கிரெடிட் ஸ்கோர் அடியோடு பாதிக்கப்படும்.. இதனால் பின்னாளில் ஒரு அவசர தேவைக்கோ அல்லது தொழில் தொடங்கவோ வங்கியில் கடன் கேட்டால் கிடைக்கவே கிடைக்காது.
இந்திய இளைஞர்களுக்கு மன உளைச்சல்
அதுமட்டுமில்லாமல், வாங்கிய கடனை 31 முதல் 90 நாட்கள் வரை கட்டாமல் இழுத்தடிக்கும் பழக்கமும் இளைஞர்களிடம் அதிகமாகி வருகிறது..
தவணை கட்ட முடியாமல் போகும்போது ஏற்படும் மன உளைச்சல், இளைஞர்களின் நிம்மதியைக் கெடுக்கிறது.. சம்பாதிக்கும் முன்பே கடனாளியாக மாறுவது அவர்களின் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குகிறது.. ஆசைக்காகக் கடன் வாங்கிவிட்டு, வாழ்நாள் முழுவதும் வட்டி கட்டும் இந்த நிலை மாற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது.
முறையான திட்டமிடல் இல்லாவிட்டால், இந்த இளம் தலைமுறை மீள முடியாத நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது..!!
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா












Click it and Unblock the Notifications