இன்னும் ஊதியம் வரவில்லை.. பாரதியார் பல்கலை. தொழிலாளர்கள் வேதனை! முதல்வர் ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை
சென்னை: தற்காலிக தொழிலாளர்களுக்கு ஆறு மாதம் பணி நீட்டிப்பு செய்து ஆணை வழங்கிய பிறகும் இன்னும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் நமது பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்றுவரை தற்காலிக தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை எனவும் தொழிலாளர்கள் தை திருநாளை கொண்டாடி மகிழ வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று பாரதியார் பல்கலைக்கழக பணியாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கோவை, பாரதியார் பல்கலைக்கழகப் பணியாளர்கள் நலச்சங்கம் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை Convenor அரசு செயலாளர் சங்கர் ஐ.ஏ.எஸ், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், பதிவாளார், துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மாண்புமிகு Convenor அவர்களுக்கு தற்காலிக தொழிலாளர்களுக்கு ஆறு மாதம் பணி நீட்டிப்பு செய்து ஆணை வழங்கிய பிறகும் இன்னும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் நமது பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்றுவரை தற்காலிக தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை. இந்த ஆண்டு மட்டும் பல மாதங்கள் ஊதியம் கொடுக்காமல் தொழிலாளர்கள் பட்டினிக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
இம்மாதமும் அதே போன்று பட்டினிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். ஆதலால் தாங்கள் காலதாமதம் இன்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் இது போன்ற நிலைமை தொழிலாளர்களுக்கு மீண்டும் வராமல் நடவடிக்கைகள் மேற்கொண்டு பல்கலைக்கழக நிர்வாகம் தொழிலாளர்களை பாதுகாத்திட வேண்டும். தற்காலிக தொழிலாளர்களின் கோப்புகளை முடக்கி வைக்கும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசால் சம்மந்தப்பட்ட நிதி ஆண்டுகளில் குறைந்தபட்சம் 240 நாட்கள் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் சிறப்பு மிகை ஊதியம் ரூ.1000/- ஜனவரி 2025 முதல் தொழிலாளர்களுக்கு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்து வருகின்றது. பல்கலைக்கழக நிதி அலுவலர் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை தவறாக உள்ளது என்று குற்றம் சாட்டுகிறார்.
இது குறித்து சங்கம் கடிதங்கள் கொடுத்தும் நேரில் தங்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது சென்ற ஆண்டு ஜனவரி 2025 நிலுவையில் உள்ள பொங்கல் போனஸ் ரூ.1000/- மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 2026 பொங்கல் போனஸ் ரூ.1000/- இரண்டையும் இவ்வாரத்திற்குள் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொழிலாளர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் அந்த கோப்புகளை முடக்கி வைத்துள்ள அலுவலர்களை மாற்றம் செய்ய வேண்டுகிறோம்.
குறிப்பு: அரசாணையில் சம்பந்தப்பட்ட நிதி ஆண்டுகளில் குறைந்தபட்சம் 240 நாட்கள் வேலை செய்திருந்தால் கொடுக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழில் கொடுக்கப்பட்டுள்ள அரசாணையிலும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள அரசாணையிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பல்கலைக்கழக விடுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த ஒரு வருடமாக கோவை மாவட்ட ஆட்சியரால் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதிய உயர்வை கொடுக்காமல் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சங்கமும் தொழிலாளர்களும் தங்களிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. சம்மந்தப்பட்ட பல்கலைக்கழக அலுவலர்கள் அவர்களது கோப்பினை முடக்கியும் அலைக்கழித்தும் வருகின்றனர்.
கடந்த இரண்டு வருட காலமாக போராடி தொழிலாளர்கள் பெற்ற ஊதிய உயர்வினை விடுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். ஆதலால் மேற்படி குறைபாடுகள் சரி செய்யப்பட்டு உடனடியாக அவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகையினை கால தாமதமின்றி வழங்கிட வேண்டும்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழகம் முதுகலை விரிவாக்கம் மைய்யத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 4 மாத காலமாக (ஆகஸ்ட் 2025) ஊதியம் வழங்கவில்லை. அவர்களுக்கு பணி நீட்டிப்பு ஆணையும் வழங்கவில்லை. அவர்களுக்கு பொங்கல் திருநாளுக்கு முன்பாக நான்கு மாத ஊதியம் வழங்கிட வேண்டும்.
குறிப்பு: இந்த ஆண்டு மட்டும் அவர்களுக்கு பணி நீட்டிப்பு ஆணை கொடுக்காமல் மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. மிகவும் வருத்தத்திற்குரியது.
பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு 28 நாள் ஊதியமும் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்யும் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கிடவும் ஆட்சி குழுவும், நிதிக் குழுவும் டிசம்பர் 2024 அன்று ஒப்புதல் அளித்தும் இன்று வரையிலும் தங்களிடம் ஒப்புதல் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒரு வருடமாக எவ்வித பணிகளும் செய்யவில்லை ஆதலால் தாங்கள் தொழிலாளர்களுக்கு மேற்படி ஊதியங்கள் காலதாமதமின்றி வழங்கிட வேண்டும்.
கோவை மாவட்ட ஆட்சியரால் 2025- 2026 ஆம் நிதி ஆண்டிற்கு உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை 01.04.2025 முதல் தொழிலாளர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கால தாமதமின்றி உயர்த்தி வழங்கிட வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் ஓட்டுநர்கள் C.இலட்சுமணன். S.மாரியப்பன், V.கனகராஜ் ஆகியோருக்கு துணைவேந்தர் குழு உறுப்பினரின் பழிவாங்கும் நடவடிக்கையால் இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்கவில்லை அவர்களுக்கு விரைந்து ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஓட்டுநர் C.இலட்சுமணன் அவர்களுக்கு இரவு நேர Ambulance Duty பணி செய்தும் மறுக்கப்பட்டுள்ள அதற்கு அடுத்த நாள் Duty Off -யை மீண்டும் அவருக்கு வழங்கிட வேண்டும்.
மேற்படி தொழிலாளர்களின் நியாயமான, உயிர் வாழ்வதற்கு தேவையான வாழ்வாதார கோரிக்கைகளை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டுகிறோம். மேலும் கடந்த ஒரு வருட காலமாக தொழிலாளர்களின் மேற்படி கோப்புகளை முடக்கியும், வஞ்சித்தும் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்கும் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழக அலுவலர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எமது தொழிற்சங்கம் தங்களை கனிவுடன் கேட்டுக் கொள்கின்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications