சென்னையில் வெதர் கண்டிசனை விட ரோடு கண்டிசன் மோசம்.. கொட்டும் மழையில் அவதிப்பட்ட குழந்தைகள்
சென்னை: சென்னையில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மழை பெய்தது. கொட்டும் மழையில் குழந்தைகளை பள்ளிக்கு விட படாதபாடு பட்டனர். விடுமுறை அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காலை முதல் மாலை வரை கருமேக கூட்டங்களுடன் காணப்படுகிறது, இரவு முதல் அதிகாலை வரை மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோல் காலையிலும் மழை விழுந்து வருகிறது.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக இரவில் இருந்து காலை 10 மணி வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சென்னையில் புது வண்ணாரப்பேட்டையில் பல தெருக்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். ராயபுரம், கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை பகுதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
இதேபோ பட்டாளத்தில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் வந்தது. பெரம்பூர், ஜமாலியா உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்தை சந்தித்தனர். இதேபோல் கீழ்ப்பாக்கம் அழகப்பா சாலை, திரு.வி.க.நகர், மூலக்கொத்தளம், நுங்கம்பாக்கம் வடக்கு மாட தெரு பகுதியிலும் தண்ணீர் தேங்கியது.
இந்த மழை காரணமாக சென்னை முழுவதும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. வடசென்னையை பொறுத்தவரை மூலக்கொத்தளம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருந்தது. அந்த சுரங்கப்பாதையில் செங்குன்றத்தில் இருந்து திருவொற்றியூர் செல்லும் மாநகர பஸ் பழுதாகி நின்றது. இதனையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்ட பின்னர் கிரேன் மூலம் பஸ் மீட்கப்பபட்டது. அதனைத்தொடர்ந்து தேங்கிய மழைநீர் மோட்டார் பம்புகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் தண்டவாளங்கள் மூழ்கும் அளவிற்கு மழைநீர் தேங்கியதால் ரயில்கள் குறைந்த வேகத்திலே சென்றன. செனனையில் மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் சாலைகளில் தண்ணீர்தேங்கி கிடந்தது. மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் பகுதிகளில் சாலை பணிகள் மற்றும் வடிகால் பணிகள் முடியாததால் சாலைகள் எல்லாம் தண்ணீரில் தத்தளிக்கின்றன. வாகன ஓட்டிகள் எங்கு பள்ளம் உள்ளது. மேடு உள்ளது என்று தெரியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, புரசைவாக்கம் தாணா தெரு, வடபழனி 100 அடி சாலை, ராஜாஜி சாலை, சர்தார் பட்டேல் சாலை, மகாத்மா காந்தி சாலை போன்றவற்றில் கடும் போக்குவரத்து நெரிசல் எற்பட்டது
சாலைகளில் பல இடங்களில் தார்-ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்த சம்பவங்கள் நடக்கின்றன.
இதனிடையே சென்னையில் நேற்று காலையிலும், இன்று காலையிலும் மழை பெய்ததால், கொட்டும் மழையில் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து செல்ல பெற்றோர் படாதபாடு பட்டனர். விடியவிடிய மழை பெய்து வரும் நிலையில் எப்படியும் விடுமுறை அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாற்றம் அடைந்தனர். தொடக்க பள்ளிகளுக்காவது விடுமுறை விட்டிருக்கலாம் என்று பெற்றோர்கள் கவலைகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
சிதைந்துபோன மாணவர்கள் நம்பிக்கை.. CBSE விவகாரத்தில் குளறுபடிகள் என்ன? அதிர வைக்கும் ரிப்போர்ட் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications