Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்ஜினில் டாய்லெட் கிடையாது.. ரயிலை ஓட்டும் பெண் லோகோ பைலட் என்ன செய்வார்கள் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் ஓடும் ரயில்களில் 97 இன்ஜின்களில் மட்டுமே டாய்லெட் வசதி உள்ளது. மீதமுள்ள ரயில் இன்ஜின்களில் டாய்லெட் வசதி இல்லை. இதனால் நீண்டதூரம் ரயிலை ஓட்டி செல்லும் லோகோ பைலட் எனும் டிரைவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். டாய்லெட் இல்லாததால் பணியின்போது பெண் லோகோ பைலட்கள் எப்படி சமாளிப்பார்கள்? என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் குறைந்த செலவில் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் மக்களின் முதல் தேர்வாக இருப்பது ரயில்கள் தான். நாம் நினைக்கும் இடத்துக்கு வேகமாக விமானத்தில் செல்லலாம் என்றாலும் அதன் கட்டணம் என்பது மிகவும் அதிகமாக உள்ளது. அதேபோல் சொகுசாக காரில் பயணம் மேற்கொண்டாலும் அதிக செலவு ஏற்படும்.

No toilet in Train engine: How Indian Railways women loco pilots managed? details here

இதனால் நீண்டதூர பயணத்துக்காக விமானம், காரை பயன்படுத்துவது என்பது நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு இயலாத காரியமாக உள்ளது. இதனால் இந்தியாவில் பெரும்பாலானவர்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர்.

மேலும் ரயிலில் உணவு வசதி, படுக்கை வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவை இருக்கின்றன. இதனால் பணக்காரர்கள் கூட அவ்வப்போது ரயில் பயணத்தை தான் நீண்ட தூரம் செல்ல தேர்வு செய்கின்றனர். பயணிகளுக்கு கழிவறை வசதியுடன் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெரும்பாலான ரயில்களில் டாய்லெட் வசதி என்பது இல்லை.

இந்தியாவை பொறுத்தமட்டில் 97 ரயில் இன்ஜின்களில் மட்டுமே டாய்லெட் வசதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரயில் என்ஜின்களில் டாய்லெட் வசதி என்பது இல்லை. இதனால் ரயில் இன்ஜின் டிரைவர்கள் பிரச்சனையை சந்திக்கின்றனர். குறிப்பாக ஆண்களை விட பெண் இன்ஜின் டிரைவர்கள் அதிக சிரமத்தை சந்திக்கின்றனர். இதுபற்றிய தொடர் புகார்கள் காரணமாக 2013ம் ஆண்டில் ரயில்வே பட்ஜெட்டில் மின்சார ரயில்களின் இன்ஜின்களில் தண்ணீர் வசதியுடன் கழிவறை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

அதன்பிறகு பயோ-டாய்லெட் பொருத்தப்பட்ட முதல் இன்ஜினை மத்திய பாஜக ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இருப்பினும் தற்போது வரை மொத்தம் 97 ரயில் இன்ஜின்களில் மட்டுமே டாய்லெட் வசதி உள்ளது. இந்திய ரயில்வேயில் மொத்தம் 14,000க்கும் மேற்பட்ட டீசல்-எலக்ட்ரிக் இன்ஜின்கள் உள்ளன. இதில் 97 என்பது மிகமிக சொற்ப அளவாகும். மேலும் மொத்தம் 60,000க்கும் மேற்பட்ட லோகோ பைலட்டுகள் உள்ளனர். இதில் சுமார் 1,000 பேர் பெண்கள். இந்த பெண் லோகோ பைலட்டுகளில் பெரும்பாலானவர்கள் குறுகிய தூர ரயில்களை இயக்குகின்றனர். இருப்பினும் ஒரு பகுதியில் பயணிகள் ரயில்களை இயக்குகின்றனர்.

லோகோ பைலட்டாக ஆண், பெண் என யாராக இருந்தாலும் கூட டாய்லெட் இல்லாத இன்ஜின்களில் பணியாற்றும்போது அவர்கள் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். ரயில்கள் நிறுத்தப்படும் ஸ்டேஷன்களில் உள்ள கழிவறைகளை மட்டுமே அவர்கள் பயன்படுத்த முடியும். ஆனால் ரயில்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லுமா? என்றால் கிடையாது. உதாரணமாக அதிவேக ரயிலாக இருந்தால் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே நிறுத்துவார்கள். ரொம்ப கஷ்டம். உதாரணமாக சென்னை டெல்லி ராஜ்தானி ரயில், காலை 6.05 மணிக்கு புறப்பட்டு கிட்டத்தட்ட மதியம் 12 மணிக்கு விஜயவாடாவில் தான் நிற்கும். அதுவரை சிரமத்தை எதிர்கொள்ள வேண்டும்.

இந்த வேளையில் பெண் லோகோ பைலட்டுகள் என்ன செய்வார்கள் என்று யோசித்து உள்ளீர்களா? அதாவது டாய்லெட் இல்லாத இன்ஜினில் டிரைவராக பெண்கள் பணியாற்றும் போது தண்ணீர் அருந்துவதை குறைத்து கொள்கிறார்கள். உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். சிலர் குறைந்த அளவில் மட்டும் உணவு எடுத்து கொள்கின்றனர். மேலும் சிலர் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்கின்றனர். மேலும் சிலர் தங்களின் நீண்ட தூர ரயில் பயணத்தின் சிரமத்தை உணர்ந்து விடுப்பில் கூட செல்வார்களாம்.

இதுபற்றி,பெண் உதவி லோகோ பைலட் ஒருவர் கூறுகையில், ‛‛இன்ஜினில் டாய்லெட் இல்லாததால் ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும் பெண்கள் அதிக சிரமத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் அதிக பிரச்சனை வரும். இதனால் நான் விடுப்பு கூட எடுக்கிறேன். மேலும் சரக்கு ரயில்களை இயக்கும்போது குளிக்ககூட நேரமின்றி ஓட்டிச்செல்லும் சூழல் ஏற்படும்.

இது அதிக வேதனையை தரும். இந்தியாவில் ரயில்வே துறை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்ஜினில் கழிவறை இல்லாததால் லோகே பைலட்டுகள் தினமும் பணி நேரத்தில் போரை எதிர்கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். இயற்கை உபாதையை கட்டப்படுத்த முயற்சிக்கின்றனர்'' என்றார்.

இன்னொரு பெண் இன்ஜின் டிரைவர் கூறுகையில், ‛‛நான் ரயில்வே துறைக்கு மிகவும் விருப்பப்பட்டு பணியில் சேர்ந்தேன். இன்ஜின் டிரைவராக பணிக்கு செல்வதை நான் அதிகம் விரும்பினேன். ஆனால் பணிக்கு சேர்ந்த பிறகு சரக்கு ரயிலில் பணியமர்த்தப்பட்டேன். 40 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை சுமார் 5 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை ஓட்டும்போது டாய்லெட் இல்லாதது அதிகமாக கஷ்டப்பட்டேன். இதனால் சானிட்டரி நாப்கின் பயன்படுத்தி உள்ளேன்'' என வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+