இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2024.. தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு பரிசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது. மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது கவிதை உரைநடைக்காக ஹான் காங்கிற்கு பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டு தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.

nobel nobel prize physics

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது. ஹான் காங் தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் 1970 இல் பிறந்தார். அவள் 10 வயதில் சியோலுக்கு குடிபெயர்ந்தார். ஹான் காங் தீவிர இலக்கியப் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர். தென் கொரியாவில் கவனிக்கத்தக்க எழுத்தாளர் குடும்பத்தில் இருந்து வந்தவர் . எழுத்து மட்டுமன்றி ஹான் காங் கலை மற்றும் இசையிலும் தென் கொரியாவில் பிரபலம்.

பெரும்பாலும் வரலாற்று ரீதியாக நடந்த கொடூரங்கள், மனித வாழ்க்கையின் பலவீனத்தை விதமாக அவர் கவிதைகள், உரைநடையை எழுதி வந்தார்.

ஹான் காங் 1993 இல் 'Literature and Society' என்ற இதழில் பல கவிதைகளை வெளியிட்டு பிரபலம் அடைந்தார். 1995 ஆம் ஆண்டு 'லவ் ஆஃப் யோசு' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டார், அதைத் தொடர்ந்து நாவல்கள் மற்றும் சிறுகதைகள் என பல உரைநடைப் படைப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில்தான் 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது. மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது கவிதை உரைநடைக்காக ஹான் காங்கிற்கு பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விருது: நேற்று முதல்நாள் 2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்க இயற்பியலாளர் ஜான் ஜே ஹாப்ஃபீல்ட் மற்றும் கனேடிய-பிரிட்டிஷ் கணினி விஞ்ஞானி மற்றும் அறிவாற்றல் உளவியலாளர் ஜெஃப்ரி இ ஹிண்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் அறிவிப்பின் போது இன்று அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் அடிப்படை செயல்திறன் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டேவிட் பேக்கர், இங்கிலாந்தின் டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகிய 3 பேருக்கும் 'புரதம்' சார்ந்த ஆராய்ச்சிக்கான இந்த நோபல் பரிசு என்பது நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே இன்று 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+