Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்டைக்கேறிய போதை.. குஷிநகர் வீட்டில் கேட்டு அடங்கிய சத்தம்.. அங்கே கண்ட காட்சி.. எகிறி ஓடிய மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுபோதை மண்டைக்கேறிவிட்டால் ஒரு குடும்பம் எப்படி எல்லாம் சீரழியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் ஆகும்.. குடும்பத்துக்காக உழைக்க வெளியூர் சென்றவர், தவறான பழக்கத்துக்கு ஆளாகிவிட்டார்.. இது இன்று அந்த குடும்பத்தையே பரிதாபத்தில் தள்ளிவிட்டது. என்ன நடந்தது?

உத்தர பிரதேசம் மாநிலம் குஷிநகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் குப்தா.. இவருக்கு 30 வயதாகிறது... மும்பையில் தங்கி தனியார் வேலை செய்து வந்தார்.. மனைவி பெயர் பிரியங்கா... இவருக்கு 28 வயதாகிறது... பிரியங்கா தன்னுடைய மாமியார் ரூனா தேவியுடன் சொந்த ஊரான குஷிநகரில் வசித்து வந்தார்..

Kushinagar family dispute neighbors

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார் சிக்கந்தர்... அதற்கு பிறகு மீண்டும் மும்பை வேலைக்கு போகவில்லை.. வேறு எங்கேயும் வேலையையும் தேடவில்லை.. அதுமட்டுமல்ல, சிக்கந்தரின் நடவடிக்கையிலும் பெரும் மாற்றம் தென்பட்டது..

கண்ணை மறைத்த போதை

சொந்த ஊரில் இருந்தவரை ஒழுங்கான வாழ்க்கையை வாழ்ந்து வந்த சிக்கந்தர், மும்பை சென்று திரும்பி வந்த பிறகு முற்றிலும் மாறிய மனிதராகிவிட்டாராம்.. மதுப்பழக்கத்துக்கும் ஆளாகி இருந்தார்.. நாளுக்கு நாள் அதிகரித்த மது பழக்கம் தீவிரமானது.. கஞ்சா பயன்பாடு அதிகரித்தது... எந்நேரமும் போதையில் நடமாடி வந்தார்.. இதனால் அடிக்கடி வீட்டில் சண்டையும், தகராறும் வெடித்தது...

போதை கண்ணை மறைக்கும் போதெல்லாம் தன்னுடைய அம்மாவையும், பிரியங்காவையும் தாக்கியதாக கூறப்படுகிறது.. தினந்தோறும் சிக்கந்தரின் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள் மனைவியும், தாயும்.

இந்த நிலையில் திங்கட்கிழமை அன்று வழக்கம்போல் மதுபானம் குடித்துவிட்டு சிக்கந்தர் வீட்டிற்கு வந்துள்ளார்.. போதை தலைக்கேறியதும் மனைவி பிரியங்காவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. உடனே அவரது அம்மா ரூனா அவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.. ஆனால் சிக்கந்தருக்கு கோபத்தை அதிகமாக்கிவிட்டது...

அந்த மாமிசம் சாப்பிட்டார்

ஒரு கட்டத்தில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாத நிலையில் சிக்கந்தர் இருவரையும் தாக்க தொடங்கியுள்ளார்... தெருவில் கிடந்த சிமெண்ட் செங்கலை எடுத்த அவர் மனைவி மற்றும் அம்மாவின் தலைக்கு பல காயங்கள் ஏற்பட்டன.. இதனால் அவர்கள் 2 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இரு பெண்களின் அலறல் சத்தம் நின்றதுமே அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர் சிக்கந்தர் வீட்டில் எட்டிப்பார்த்துள்ளனர்.. அங்கே இறந்து கிடந்த மனைவி, அம்மா அருகில் உட்கார்ந்து, அந்த மாமிசத் எடுதது மாமிசம் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் அக்கம்பக்கத்தினரை பார்த்ததுமே, எழுந்து வந்து அவர்களையும் சிக்கந்தர் தாக்கியதாக கூறப்படுகிறது.. இதனால் அனைவரும் கூச்சலிட்டு கொண்டே அங்கிருந்து ஓடிச் சென்றுவிட்டனர்.. அத்துடன் உடனடியாக போலீசுக்கும் தகவல் சொல்லி உள்ளனர்..

2 பெண்கள்

விரைந்து வந்த போலீசார், சிக்கந்தரை கண்டு பயந்தனர்.. பிறகு மெல்ல அவரிடம் சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர்... 2 பெண்களின் சடலங்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான விசாரணையையும் நடத்தி வருகிறார்கள்.. உண்மையிலேயே சிக்கந்தர் மது, கஞ்சா காரணமாக இப்படி நடந்து கொள்கிறாரா அல்லது நரம்பியல் கோளாறு / மனநிலை பாதிப்பு போன்ற காரணங்களால் நடந்ததா என்ற கோணத்திலும் விசாரிக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+