பேங்க் அக்கவுண்ட்டில் வாரிசுகள் 4 பேரை நியமிக்கலாம்.. உரிமை கோரப்படாத வங்கி பணம் இனிமேல் வந்து சேரும்
சென்னை: வங்கிகளின் விதிமுறைகளில் இன்று முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. அதன்படி, வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கு, லாக்கர் அல்லது பாதுகாப்புக்காக பொருளுக்கு அதிகபட்சம் 4 நபர்களை காப்பாளர்களாக நியமிக்க முடியும். இந்த நடவடிக்கை அவசர காலங்களில் குடும்பங்களுக்கு நிதி அணுகலை எளிதாக்குவதையும், உரிமை தொடர்பாக எழும் சட்டப் பிரச்சனைகளைக் குறைப்பதையும் நோக்கநோக்கமாகக் கொண்டது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
இன்றைய சூழலில், வங்கி கணக்கு இல்லாதவர்களே இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது.. பெரும்பாலானோர் வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்து அதை பராமரித்து வருகிறார்கள்.

எனினும், திடீரென வாடிக்கையாளர் எதிர்பாராமல் இறந்துவிட்டாலோ அல்லது வங்கி பாஸ்-புக்கை தொலைத்துவிட்டாலோ அல்லது வேறு சில காரணங்களாலோ அது கோரப்படாமலேயே உள்ளது.
அதுமட்டுமல்ல, ஒருவரின் சேமிப்பு கணக்கோ அல்லது நடப்பு கணக்கோ எதுவாக இருந்தாலும் அதில் 10 வருடங்கள் வங்கிப்பரிமாற்றம் எதுவுமே இல்லாமல் இருந்தாலும், டெபாசிட்டுகள் முதிர்ச்சி அடைந்து 10 வருடங்கள் கோரப்படாமல் இருந்தாலும், அந்த கணக்குகள் டி-ஆக்டிவேட் அதாவது செயல்படாத கணக்குகளாக மாறிவிடும்.
பேங்க் அக்கவுண்ட் டெபாசிட்
அத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் கணக்கிலுள்ள பணம், அவர்களின் வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டுதாரர்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் சேர்க்கப்பட்டுவிடும். இத்தனைக்கும் அக்கவுண்ட் துவங்கும்போது, ஒரு நாமினி அதாவது வாரிசுதாரர் பெயரை குறிப்பிட்டுதான் துவங்கப்படுகிறது.
எனினும் பலசமயங்களில் அவர்கள் குறிப்பிடும் வாரிசுதாரரை எளிதாக கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது. சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களும் இதுகுறித்து நேரடியாக வந்து கோரமுடியாத நிலைமை உள்ளது.
அந்தவகையில், கடந்த ஜூன் மாதம் கணக்குப்படி, பொதுத்துறை வங்கிகளில் இதுபோல கோரப்படாத தொகையாக ரூ.58 ஆயிரத்து 330 கோடியே 26 லட்சமும், தனியார் வங்கிகளில் இதுபோல கோரப்படாத தொகையாக ரூ.58 ஆயிரத்து 330 கோடியே 26 லட்சமும், தனியார் வங்கிகளில் ரூ.8 ஆயிரத்து 673 கோடியே 72 லட்சமும் உள்ளதாக கூறப்படுகிறது.
வாரிசுதாரர்கள் நாமினி
கணக்கில் இருப்பு உள்ள பணம் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்துக்கு போய் சேராத நிலைமைக்கு காரணம், அக்கவுண்ட்டை துவங்கும்போது ஒரு வாரிசுதாரரை மட்டுமே நியமிக்கமுடியும் என்ற விதிமுறை இருப்பதுதான். எனவேதான் இதனை மாற்றியமைக்க புதிய முடிவு தற்போது எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று நவம்பர் 1ம் தேதி முதல் வங்கி கணக்கு மற்றும் லாக்கர் வசதிகளைத் தொடங்கும் நபர்கள் தங்களின் வாரிசுதாரர்களாக அதிகபட்சம் 4 பேரை முன்பே நியமிக்கலாம் மற்றும் அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டிய தொகையை வெளிப்படையாக குறிப்பிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒருவரின் மரணம் அல்லது தொடர்பில்லாமை காரணமாக பணம், நகைகள் போன்ற சொத்துகள் வங்கிகளில் முடங்கிக் கிடக்க இருக்காது என்று நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் நம்புகின்றன.
வங்கி கணக்குகள் லாக்கர் சொத்து
இந்த புதிய விதியை நவம்பர் 1 முதல் அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு ஏற்கனவே உத்தரவு விடுக்கப்பட்டது.
அந்த உத்தரவில், வங்கி கணக்குகளிலும் லாக்கர் சொத்துகளிலும் உரிமை கோரப்படாமல் முடங்கினால் அதிகமான நிர்வாக சிக்கல்களுக்கும், பொது நிதி தொலைவுகளுக்கும் வழிவகுக்கும் என்பதனால், இதன் மூலம் முறையான வாரிசு ஒதுக்கீடு மற்றும் தேதிபடுத்தல் செய்யப்படுமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும், வங்கிகளில் டெபாசிட் கணக்குகள், பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளிட்ட பல்வேறு வங்கி சார்ந்த நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் வாரிசுதாரர்களை நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதற்கென வங்கி விதிகள் திருத்தச்சட்டம் 2025-ல், 10,11,12,13 ஆகிய பிரிவுகளில் திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.
நிரந்தர வைப்புத்தொகை
அதன்படி, இந்த நடைமுறை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.. இந்த புதிய நடைமுறையால் நிரந்தர வைப்புதொகை கணக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப வாரிசுதாரர்களை நியமிக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல், தங்கநகைகளை வங்கிகளில் பாதுகாப்பாக வைப்பதற்கான பெட்டக வசதி கொண்ட வாடிக்கையாளர்களும் வாரிசுதாரர்களை நியமிக்க முடியும்... வாடிக்கையாளர் மரணம் அடையும் பட்சத்தில் வாரிசுதாரர்களில் முதன்மையானவர் பாதுகாப்பு பெட்டக வசதியை செயல்படுத்த முடியும் என்றும் நம்பப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications