சார் தான் ஆவி பிடிக்கிறதுலயே இப்போ நம்பர் ஒன்.. "கொரோனா"வுக்கே டஃப் தரும் வடமாநில இளைஞர்கள்!

குக்கரில் பைப் செருகி ஆவி பிடிக்கிறார்கள் வடமாநில இளைஞர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொற்று பாதிப்பில் வடமாநிலங்கள்தான் முதலிடத்தில் உள்ளது என்றால், ஆவி பிடிக்கும் ஐடியாவை வழங்குவதிலும் வடமாநிலத்தவரே முதன்மையாக இருக்கிறார்கள்.. இந்த வீடியோ காட்சிகளை இணையத்தில் ட்ரோல் செய்தும் வருகிறார்கள்.

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது.. தடுப்பூசி ஒரு பக்கம் இருந்தாலும், இயற்கை வைத்தியங்களையும் சிலர் நாடி வருகிறார்கள்.

சமீப காலமாக ஆவி பிடிப்பதால், தொண்டை, மூக்கில் தொற்றியிருக்கும் வைரஸ் இறந்துவிடும் என்ற நம்பிக்கை பெருகிவருகிறது.. அதேசமயம், டாக்டர்களின் அட்வைஸ் இல்லாமல் பொதுஇடங்களில் யாரும் ஆவி பிடிக்ககூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குக்கர்

குக்கர்

காரணம், வாயை திறந்து புகையை பிடிக்கும் போது வைரஸ் கிருமியானது அருகில் உள்ளவர்களுக்கு மிக வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது என்பதால், இதனை மருத்துவ சிகிச்சையாக கருத முடியாது என்கிறார்கள். மேலும், ஒரே இடத்தில் பலர் நின்று ஆவி பிடிப்பதால் தொற்று அதிகமாக பரவும் வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

புனல்

புனல்

இந்நிலையில், அவர்களாகவே வீட்டிற்குள் ஆவி பிடிக்க தொடங்கி உள்ளனர்.. இந்த ஆவிபிடிப்பதில் பலர் பலவகைகளை கையாண்டு வருகின்றனர்.. இந்த விஷயத்தில் வடமாநில நபர்கள்தான் புது புது ஐடியாக்களை கையில் எடுத்துள்ளனர். அதில் ஒருவர் , விறகு அடுப்பை எரிய விட்டு, அதில் குக்கரை வைத்திருக்கிறார்.. அந்த குக்கரில் டியூபை சொருகி, மறுபுறம் நீளமான புனல் ஒன்றை வைத்து நின்றுகொண்டே ஆவி பிடிக்கிறார்...

டியூப்

டியூப்

இன்னொருத்தரோ, குக்கர் மூடியில் டியூபை செருக்கிவிட்டு, அந்த மூடியை பிடித்து கொண்டு ஆவி பிடிக்கிறார்.. இந்த வீடியோ காட்சிகள்தான் இணையத்தில் வைரலாகி, அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்து வருகின்றனர்.. ஆவி பிடிக்க இது சிறந்த வழி என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை, இதனால் விளைவுகளும் ஏற்படும் என்பதை அறியாமல் உள்ளனர்.

வீடியோ

வழக்கமாக ஆவி பிடிக்க வேண்டும் என்றால், தண்ணீரை சூடு செய்து அதில் ஆவி பிடிப்பதற்கான மாத்திரை, அல்லது மூலிகைச் செடிகளை, இலைகளை பயன்படுத்துவார்கள்... ஆனால், வடமாநில நபர்களோ வேற லெவலில் யோசித்து, டாக்டர்களுக்கே டஃப் தந்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+