பெண்ணுரிமை, மாநில சுயாட்சி, சமூக நீதி-கருணாநிதிக்கு பாராட்டு மழையை குவித்த வட இந்திய பெண் தலைவர்கள்!
சென்னை: பெண்ணுரிமை, மாநில சுயாட்சி, சமூக நீதிக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய பணிகள், செயல்படுத்திய திட்டங்களை நினைவு கூர்ந்து வட இந்திய பெண் தலைவர்கள் பாராட்டு மழை குவித்தனர்.
சென்னையில் இன்று திமுக மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில் பங்கேற்ற பெண் தலைவர்களின் சில கருத்துகள்:

தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே எம்.பி: வளமான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு, தமது உரிமைக்காக தமிழின் உரிமைக்காக எப்போதும் நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கும். கூட்டாட்சிக்காக திமுக குரல் கொடுப்பதை நான் பாராட்டுகிறே. லோக்சபாவில் என்னை சுற்றி எப்போதும் திமுக எம்பிக்கள்தான் இருப்பார்கள். நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசும் போது அமளியில் ஈடுபடும் பாஜகவினரை நாங்களுடன் கூட நின்று அடக்குவோம். தமிழ் மொழி அழகான, இனிப்பான மொழி. தமிழுக்கும் மகாராஷ்டிரத்துக்கும் ஒற்றுமைகள் உள்ளன. தமிழிலும் மராத்தியிலும் ழ, ல, ள ஆகியவை உள்ளன.
டெல்லி துணை சபாநாயகர் ராக்கி பிட்லன்: இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்று. பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து நாம் போராட வேண்டியுள்ளது.
சமாஜ்வாதி கட்சி டிம்பிள் யாதவ் எம்பி: பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா பின்னோக்கி செல்கிறது என்பதற்கு மணிப்பூர் வன்முறை உதாரணம்.
பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றி அதை நடைமுறைக்கு கொண்டுவராமல் ஏமாற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு.
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை அதிகரித்தவர் கருணாநிதி. மகளிர் உரிமை, பாலின சமநிலை, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. மாநில முதல்வர்கள், சுதந்த்இர தினத்தில் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தவர் கருணாநிதி.
சிபிஐ ஆனி ராஜா: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் முன்னெப்போதையும் விட இப்போது அதிகம். மதச்சார்பற்ற இந்த நாட்டில் எங்கும் ஜெய்ஶ்ரீராம் குரல் கேட்கும் நிலையில்தான் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம்.
பீகார் அமைச்சர் லெஜிசிங்: பெண்கள் நலத் திட்டங்கள் ஏராளமானவற்றை செயல்படுத்தியவர் கருணாநிதி. தமிழ்நாடு போலவே பீகார் மாநிலமும் பெண்கள் முன்னேற்றத்துக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ்: சமூக நீதி, சமத்துவத்துக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கருணாநிதி. பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தொடர்ந்து திமுக அரசு முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் பெண்களுக்கு பல முன்னேற்றத் திட்டங்களை அதிகளவில் கொண்டு வந்தவர் கருணாநிதி. மகளிருக்கு இடஒதுக்கீடு,சொத்துரிமை வழங்கியவர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications