வெயில்ல கூட போகலாம்.. ரயில்ல போக முடியலை! பயணிகளை திணற வைக்கும் வடக்கு நண்பர்கள்! ரயில் பரிதாபங்கள்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செல்லும் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளை வட மாநில பயணிகள் ஆக்கிரமித்துக் கொள்வதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது. மேலும் இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் டிக்கெட் பரிசோதகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பல்வேறு வகை போக்குவரத்துகள் இருந்தாலும், குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் தருவது ரயில்வே துறை என்பதால் மக்கள் பெரிதும் அதையே விரும்புகிறார்கள். குடும்பத்துடன் நீண்ட தூர பயணங்கள், தொழில் தொடர்பான பயணங்கள் என ரயில்வே சேவையை நம்பும் மக்கள் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.
ஆனால், இத்தகைய பெரும் போக்குவரத்து துறையில் நெரிசல் மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் பற்றாக்குறை பெரும் சிக்கலாக மாறி உள்ளது. இன்டர்சிட்டி ரயில்கள் தொடங்கி, எக்ஸ்பிரஸ் ரயில்கள், தொலைதூர ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் என ரயில்வே ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டாலும் நெரிசலால் பயணிகள் பல நேரங்களில் கடும் இன்னலை சந்திப்பதாக சொல்லப்படுகிறது.

வடமாநில பயணிகள்
குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு பயணம் செய்யும்போது மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாக குற்றம் சாட்டுகின்றனர். பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இரண்டு முதல் மூன்று வரை மட்டுமே இணைக்கப்படுகின்றன. முன்பதிவு செய்தால் மட்டுமே ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
வடமாநில பயணிகள்
இதனால் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் எனவும், முன்பதிவில்லா முழு ரயிலையும் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் முன்பதிவுள்ள பெட்டிகளில் முன்பதிவு இல்லாத பயணிகள் ஆக்கிரமித்துக் கொள்வதாகவும் புகார் எழுந்திருக்கிறது. வட மாநிலங்களில் இருந்து அதிக அளவு தொழிலாளர்கள் கர்நாடகா தெலுங்கானா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை நோக்கி வருகின்றனர். அவ்வாறு பயணம் செய்பவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள், ஏசி பெட்டிகளை ஆக்கிரமித்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் தொழிலாளர்கள்
குறிப்பாக "டாலர் சிட்டி" என்று அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பண்டிகை காலம் நெருங்கியுள்ளதால், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் நிலையில் உள்ளனர். நேற்று திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில், முன்பதிவு பெட்டிகளுக்குள் டிக்கெட் இல்லாமல் நுழைந்த வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக ஏறினர். கதவுகளை மூடி வைத்திருந்த பயணிகளும் பெரும் நெரிசலில் சிக்கினர். இதனால் ஆத்திரமடைந்த முன்பதிவு செய்த பயணிகள், டிக்கெட் பரிசோதகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பயணிகள் வாக்குவாதம்
முன்பதிவு செய்தே ஏசி பெட்டிகளில் ஏறியிருக்கிறோம். ஆனால், டிக்கெட் இல்லாத பயணிகள் கூட்டமாக நுழைந்து, நம்மை தள்ளி ஆக்கிரமிக்கிறார்கள். எங்களுக்கு பாதுகாப்பே இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. பயணிகளின் புகாரை எடுத்துக்கொண்டு ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்கின்றனர் பயணிகள்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications