IIT Madras: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் சீண்டல்! கட்டையை காட்டி மிரட்டிய இளைஞர் கைது
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்திற்குள் மாணவியை கட்டையை காட்டி மிரட்டி தலைமுடியை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக வடமாநில இளைஞரை கோட்டூபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை கிண்டியில் இந்திய தொழில்நுட்ப கல்லூரி எனப்படும் ஐஐடி உள்ளது. இது மத்திய அரசுக்கு சொந்தமானது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள், தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் படிக்கிறார்கள். இந்த கல்லூரியில் ஆய்வு படிப்பு வரை இருக்கிறது.

இங்கு மாணவர்களுக்கு ஊக்கத்தொகையே கணிசமான தொகை வழங்கப்படுகிறது. இங்கு படிப்பது என்பது மாணவர்களுக்கு பெரும் கனவாக இருக்கும். இங்கு படிக்க ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அட்வான்ஸுடு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் இடம் கிடைக்கும்.
ஐஐடி வளாகம்
இந்த ஐஐடி வளாகம் என்பது மிகப் பெரிய பரப்பளவு கொண்டது. கிட்டதட்ட காடு போல் இருக்கும். இந்த வளாகத்திலேயே மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளும் உள்ளன. அது போல் மாணவர்கள் சாப்பிடுவதற்காக ஃபுட் கோர்ட் உள்ளது.
ஃபுட் கோர்ட்
இந்த ஃபுட் கோர்டில் பணியாற்றுபவர் வடமாநில இளைஞர் ரோஷன் குமார். இவர் ஒரு மாணவியிடம் கட்டையை காட்டி மிரட்டி முடியை பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மாணவி புகாரின் பேரில் சென்னை கோட்டூபுரம் அனைத்து காவல் நிலைய போலீஸார் ரோஷன் குமார் என்பவரை கைது செய்தனர்.
மெயின்ஸ் தேர்வு
திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிப்பதற்கு மாணவர்கள் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு எழுதி அவரது ஜாதி பிரிவின்படி குறிப்பிட்ட மதிப்பெண்களை எடுத்திருக்க வேண்டும். இந்த தேர்வு சற்று கடினமாக இருக்கும். இதை விட ஐஐடிக்கு படிப்பதற்கான அட்வான்ஸுடு தேர்வு மிகவும் கடினம் என்பதால் பெரும்பாலோர் இதில் இடம் கிடைத்தால் படிக்க சென்றுவிடுவார்கள். அட்வான்ஸுடு எழுதுவதில்லை.
விடுதி வசதி
இந்த கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் உள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவிக்கு ஒப்பந்த ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்பட்டது. இதுகுறித்து விடுதி வார்டனிடம் புகார் சொன்ன போது "நீ அரைகுறையாக உடை அணிந்திருந்தால், அவன் அப்படித்தான் செய்வான்" என பாதிக்கப்பட்ட பெண் அதிரும் வகையில் பேசியதாக தெரிகிறது.
ஒப்பந்த ஊழியர்
இதனால் அந்த ஒப்பந்த ஊழியர் மீதும் வார்டன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குநர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு மாணவிகள் விடியவிடிய போராட்டம் நடத்தி வந்தனர்.
கல்லூரி வார்டன்
இதையடுத்து அந்த கல்லூரி வார்டன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒப்பந்த ஊழியரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு வகுப்புக்குச் சென்றனர். இது போல் அண்ணா பல்கலைக்கழகத்தில் கூட ஒரு மாணவிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது.
ஞானசேகரன்
வெளிநபரான ஞானசேகரனை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்றும் சாகும் வரை சிறை தண்டனை என்றும் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications