Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹோலி..ஹோலி..வர்ண பொடிகளை தூவி சென்னையில் உற்சாக கொண்டாட்டம்..வாழ்த்து

நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் சென்னை சௌகார்பேட்டையில் வர்ண பொடிகளை தூவி ஹோலி பண்டிகை கொண்டாடினர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹோலி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்துடன் ஹோலிப் பண்டிகையும் சென்னையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஒருவர் மீது ஒருவர் வர்ண பொடிகளை தூவி மகிழ்ச்சியுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். வட மாநிலத்தவர் மட்டுமின்றி ஏராளமான தமிழர்களும் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

ஹோலி பண்டிகை வட இந்தியர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகையாகும். எங்கெல்லாம் வட இந்தியர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இன்றைய தினம் வண்ணமயமாக இருக்கும்.

North indians Celebrates Holi festival of colours in Chennai

ஒருவர் முகத்தில் மற்றொருவர் வண்ணப் பொடிகளை பூசி, ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வர். சென்னையில் தண்டையார்பேட்டை, சௌகார்பேட்டை உள்ளிட்ட வட மாநிலத்தவர்கள் வசிக்கும் சில பகுதிகளில் ஹோலி பண்டிகை பெரும் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையை அடுத்து இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை பக்த பிரகலாதன் கதையுடன் தொடர்புடையது. அரசுன் இரணியகசிபுக்கு ஹோலிகா என்ற சகோதரி இருந்தாள். அவள் மாயப் போர்வையை வரமாக பெற்றிருந்தாள். அதன் படி ஒரு பெரிய தீ மூட்டி, பிரகலாதனை தனது மடியில் அமர்த்திக்கொண்டு அமர்ந்தாள். அப்போது பிரகலாதன் மகாவிஷ்ணுவை வேண்டியதும் அந்த போர்வை பறந்து பிரகலாதனை மூடிக்கொண்டது. சக்தியை ஹோலிகா நெருப்பில் கருகி உயிர் விட்டாள். தீயிலும் பிரகலாதன் சாகாமல் இருப்பதைப் பார்த்த மக்கள் பிரகலாதனைப் போற்றினர்.

North indians Celebrates Holi festival of colours in Chennai

இந்த ஹோலி பண்டிகைக்கு முன் தினம் தான் ஹோலிகா தகனம் என தீமூட்டி கொண்டாடப்படுகிறது. இப்படி தீங்கிழைக்க நினைத்த ஹோலிகா தீயில் பலியானதை ஹோலி என கொண்டாடப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஏராளமானோர் நெருப்புகளை மூட்டி ஹோலி கொண்டாடினர். சிவ பெருமான் காம தகனம் எனப்படும் மன்மதனை நெருப்பால் அழித்ததைத் தான் இன்றும் ஹோலிப் பண்டிகையின் போது தீ மூட்டி கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் தீ மூட்டி அதனை சுற்றி உற்சாகமாக நடனமாடினர். பின்னர் அந்த தீ கங்குகளின் மீது நடந்து சென்றனர். இதன் மூலம் தீய சக்திகள் எதுவும் நம்மை தாக்காது என்பது அந்த மக்களின் நம்பிக்கை.

ராதா கிருஷ்ணன் காதல் கதையோடும் இந்த ஹோலி கொண்டாடப்படுகிறது. அதே போல கோபியர்கள் கண்ணனுடன் விளையாடியதையும் ஹோலியாக கொண்டாடுகின்றனர். இன்றைக்கும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பர்சானா எனும் மாவட்டத்தில் ஆண்களைப் பெண்கள் தடியால் அடித்து ஹோலி கொண்டாடும் விநோத முறை பின்பற்றப்படுகிறது. இதற்கு லத்மார் ஹோலி என்று பெயர். இந்த ஹோலி கொண்டாட்டத்திற்கு அப்பகுதி மக்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே தயாராகி விடுகின்றனர். இந்தக் கொண்டாட்டம் பர்சானா மாவட்டத்தில் இருக்கின்ற பிரபல ராதா ராணி கோவிலில் இருந்து துவங்கப்படுகிறது. கண்ணனை ராதையும் அவள் தோழிகளும் கட்டையால் அடித்து விரட்டியதை குறிக்கும் வகையில் ஆண்களை பெண்கள் விரட்டி விரட்டி அடிக்கும் இந்த வகை விளையாட்டுகள் அங்கு பிரசித்தம். உற்சாகமான கேலி கிண்டலுடன் ஆண்கள் பெண்களிடம் சிக்கித் திணறுவதும் ஹோலியின் குதூகலத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. வட இந்தியாவில் குறிப்பாக பிருந்தாவனத்தில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+