Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டத்தை ஆரம்பித்த பருவமழை! அலர்ட் மோடில் தமிழக அரசு.. அதிகாரிகளுக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டு இயல்பை விட பருவமழை கூடுதலாக இருக்கும் என வானிலை மையம் ஏற்கனவே கூறியிருந்தது. அதற்கு ஏற்றார்போலவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது.

northeast-monsoon-alert-cm-stalin-directs-officials-to-ensure-food-water-medical-facilities

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தென் மாவட்டங்கள் முதல் சென்னை வரை தமிழகம் முழுக்க பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதுபோக இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி உள்ளதாலும், இதில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி புதுவை - ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கம் போல் வடகிழக்கு பருவமழை முன்னெச்செரிக்க நடவடிக்கையாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு மழை குறித்த நடவடிக்கைகளை கேட்டறிந்து வருகிறார். இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் மழை தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

நிவாரணப் பணிகள்

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டு, கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாக மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள்

மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் மேற்கொண்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் தமிழ்நாடு முதல்வர் அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

ஜேசிபி, படகுகள், மோட்டார் பம்புகள்

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சீர்செய்திட JCB இயந்திரங்கள், படகுகள், மோட்டார் பம்புகள், மரஅறுப்பான்கள், லாரிகள் மற்றும் 51,639 மின் கம்பங்கள், 1849 மின் மாற்றிகள், 1187 மின் கடத்திகள் போன்ற தேவையான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது.

நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் இருக்க

இக்கூட்டத்தின்போது, நெல் கொள்முதல் சேமிப்பு, நகர்வு மற்றும் அரவை குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார், இந்த ஆய்வின் போது, மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்ட விவசாய பெருங்குடி மக்கள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி நடத்திட வேண்டும்.

மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் பாதுகாத்திட வேண்டும் என்றும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என்றும் முதலவர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+