‘கிரிமினல் டூர்’ வரும் வட மாநில கும்பல்.. போலீசிடம் சிக்காமல் இருக்க கையாளும் டெக்னிக்! ஷாக் தகவல்
சென்னை: தென் மாநிலங்களில் வங்கி ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபட்ட கும்பல் நாமக்கல்லில் அண்மையில் போலீசாரிடம் சிக்கியது. இந்தக் கொள்ளை கும்பல் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், இந்த கும்பல் போலீசிடம் சிக்காமல் இருக்க லாரிகளிலேயே தங்குவதும் தமிழகத்திற்கு கிரிமினல் டூர் வந்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் 3 ஏடிஎம் இயந்திரங்களில் கடந்த 27 ஆம் தேதி அதிகாலை முகமூடி அணிந்து வந்த ஒரு கும்பல் ரூ.67 லட்சத்தை கொள்ளையடித்தது. இந்த கும்பல் கன்டெய்னர் லாரியில் நாமக்கல் மாவட்டம் வழியாக தப்பி செல்ல முயற்சித்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக போலீசார் கண்டெய்னரை சினிமா பாணியில் விரட்டி சென்று மடக்கிப்பிடித்தனர்.

நாமக்கல் என்கவுண்டர்: கன்டெய்னரில் இருந்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இர்பான், சவுக்கீன் கான், முகமது இக்ரம், சபீர் , முபாரக் என 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைது முயற்சியின் போது நடந்த என்கவுண்டரில் கொள்ளையன் ஜூமாந்தீன் சுட்டுக்கொல்லப்பட்டான். அசர் அலி என்கிற கொள்ளையன் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தான். கைதான கொள்ளையர்களிடம் இருந்து ரூ.67 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
15 ஏடிஎம் மெஷின்கள்: போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏடிஎம் மெஷின்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து இருப்பது தெரியவந்து உள்ளது. இந்த கொள்ளை கும்பல் தமிழகத்திற்கு கிரிமினல் டூர் வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சுற்றுலா வருவது போல: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளைக்கு இந்த கும்பலுக்கு தொடர்பு இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. ஹரியானாவில் இருந்து கார், கன்டெய்னர் லாரியில் இந்த கும்பல் யாருக்கும் சந்தேகம் வராத படி தனித்தனியாக வந்துள்ளது. மொத்தமாக வந்தால் சந்தேகம் வரும் என்பதால் இப்படி தனித்தனியாக சுற்றுலாவிற்கு வருவது போல தமிழகத்திற்கு வந்து இருக்கிறார்கள்.
லாரியிலேயே தங்கியுள்ளனர்: விடுதிகளில் எங்கும் தங்கினால் மாட்டிக்கொள்வோம் எனக் கருதி, லாரியிலேயே இரவில் தங்கிக் கொள்வது, வட மாநில லாரி டிரைவர்கள் போல அங்கேயே சமைத்து சாப்பிடுவது என இருந்துள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத ஏடிஎம் மெஷின்களை நோட்டமிட்டுக் கொண்டு பிறகு கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையடித்ததும் காரை கண்டெய்னரில் ஏற்றிக்கொண்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.
கிரிமினல் டூர் குற்றவாளிகள்: இப்படி டூர் போல வந்து கொள்ளையடிக்கும் இந்த கும்பல், கிரிமினல் டூர் குற்றவாளிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்" என்றனர். தீரன் அதிகாரம் படத்தில், கொள்ளையர்கள் வடமாநிலத்தில் இருந்து லாரிகளில் வந்து நெடுஞ்சாலை ஓரங்களில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து செல்வதாக காட்டப்பட்டு இருக்கும். உண்மையில் நடைந்த கொலை, கொள்ளை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தின் பாணியில் கொள்ளை சம்பவத்தை ஹரியானா கொள்ளை கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications