சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிவர் புயல் கரையை கடந்தாலும் சென்னையில் ஒரு வாரத்திற்கு மழைதான்.. நார்வே சொல்லும் நல்ல செய்தி

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் கரையை கடந்தாலும் சென்னையில் ஒரு வாரத்திற்கு லேசானது முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Cyclone Nivar: அடுத்து நிவர் புயல்.. மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும்

    வங்கக் கடலில் நிகர் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது நாளை மறுநாள் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து நார்வே வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி சென்னையில் இன்று மாலை முதல் லேசான மழை பெய்யும். நாளையும் மிதமான மழை பெய்யும். நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.

    நிவர் புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்படும்.. மின்சார துறை அமைச்சர் தங்கமணி அறிவிப்புநிவர் புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்படும்.. மின்சார துறை அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

    லேசான மழை

    லேசான மழை

    ஆனால் புதன்கிழமை புயல் கரையை கடக்கும் தினத்தன்று சென்னையில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அது போல் வியாழக்கிழமை மாலையும் வெள்ளிக்கிழமை காலையும் அதிக மழைக்கு வாய்ப்புள்ளது. பின்னர் சென்னையில் மழை குறையும். சனிக்கிழமை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

    கனமழை

    கனமழை

    இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. பின்னர் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை லேசான மழை பெய்யும். செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கும் கனமழை புதன்கிழமை வரை நீடிக்கும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    பெங்களூர்

    பெங்களூர்

    அது தமிழகத்தை பொருத்தமட்டில் நாளை சென்னை, புதுவையில் லேசான மழை பெய்யும், புதன்கிழமை சென்னை, புதுவை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். பின்னர் புதன்கிழமை பெங்களூரிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

    பெங்களூர்

    பெங்களூர்

    வியாழக்கிழமை மதுரையிலும் பெங்களூரிலும் லேசான மழை இருக்கும். ஆனால் சென்னை, புதுவை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். சனிக்கிழமையும் இதே நிலைத்தான் நீடிக்கும் என நார்வே வானிலை மையத்தின் செயற்கைகோள் வீடியோ விளக்குகிறது.

    English summary
    Norway Weather report says about rain in Chennai and parts of the Tamilnadu. There will be heavy rain for Chennai , Pondy upto Saturday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X