பேரழிவுக்கான போர் நடக்கும்.. நாஸ்டர்டாமஸ் எச்சரிக்கை.. 2024 முடிய இன்னும் 2 மாதம்.. என்ன நடக்கும்?
சென்னை: 2024ல் உலகில் என்னவெல்லாம் நடக்கும் என்று தீர்க்கதரிசி நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட கணிப்புகள் தற்போது கவனம் பெற்று உள்ளன. இந்த வருடம் முடிய இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளன. இதனால் அவரின் முக்கியமான சில கணிப்புகள் அடுத்த 2 மாதங்களில் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது
உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்து வல்லுனர்களின், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான Les Propheties என்பதில் கவிதைகளாக எழுதி வைத்துவிட்டு சென்றார்.

விண்வெளி அறிஞர், ஆன்மீகவாதி, தீர்க்கதரிசி என்று அறியப்பட்ட இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று விலாவரியாக குறிப்பிட்டுள்ளாராம். உலகின் முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் இவர் இலைமறைகாயாக குறிப்பிட்டுள்ளார்.
2024ல் என்ன நடக்கும்: இந்த நிலையில்தான் தற்போது நடந்து வரும் 2024ல் என்ன நடக்கும் என்ற கணிப்புகளை இவரின் புத்தகத்தில் இருந்து வெளியிட்டு உள்ளனர். ஒரு "கடற்படைப் போர்" நடக்க வாய்ப்பு உள்ளது, மேலும் "சிவப்பு நிறம் கொண்ட எதிரி தனக்கு இருக்கும் பயத்தால், பெருங்கடலை பயத்திற்கு உள்ளாக்குவார்" என்று கூறி உள்ளார் ..
"சிவப்பு எதிரி" என்று நாஸ்ட்ராடாமஸ் சீனாவையும் நாட்டின் சிவப்புக் கொடியையும் குறிப்பிடுவதாக நியூயார்க் போஸ்ட் கூறி உள்ளது. "கடற்படை போர்" தைவான் தீவுடனான சீனாவின் பதட்டங்களை, மோதல்களை சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.
அரச பிரச்சனை: நாஸ்ட்ராடாமஸின் ஒரு பத்தியில் "தீவுகளின் ராஜா" "பலத்தால் விரட்டப்படுவார்" என்று கூறுகிறது. அவர் மூன்றாம் சார்லஸ் அரசரைக் குறிப்பிடுவதாக சிலர் நம்புகிறார்கள். சார்லஸ் மன்னரைப் பற்றி ஒரு பத்தியில், "விரைவில் ஒரு பேரழிவுகரமான போர் நடக்கும். அது முடிந்த பின் ஒரு புதிய ராஜா பதவி ஏற்பார். அவர் நீண்ட காலம் பூமியை பாதுகாப்பார்.
The Complete Prophesies for the Future என்ற புத்தகத்தை எழுதிய பிரிட்டிஷ் எழுத்தாளர் மரியோ ரீடிங், மன்னர் சார்லஸ் III "பதவியில் இருந்து விலகுவதற்கான" வாய்ப்பு உள்ளது என்று இந்த கணிப்பை பற்றி கூறியுள்ளார். பிரின்ஸ் ஹாரி புதிய மன்னர் ஆகும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
2 மாதங்கள் உள்ளன: ஆனால் இவர் குறிப்பிட்ட கணிப்புகள் இந்த வருடம் இதுவரை நடக்கவில்லை. இந்த வருடம் முடிய இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளன. இதனால் அவரின் முக்கியமான சில கணிப்புகள் அடுத்த 2 மாதங்களில் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது
கணிப்புகள்: ஆனால் சமயங்களில் இவர் கணிப்புகளை புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும். இவரை பற்றி ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு கூட இவரின் கணிப்புகள் சமயங்களில் குழப்பம் விளைவிப்பவையாக இருக்கும். இருப்பினும் இவரின் பல நூறு கணிப்புகள் உண்மையாகி இருக்கின்றன.
இந்திய அரசியல் முடிவுகள் குறித்தும் இவர் நிறைய கணிப்புகளை மேற்கொண்டதாக அவ்வப்போது கூறப்படுவது வழக்கம். 9/11 தாக்குதல், அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி கொலை, ஹிட்லரின் எழுச்சி, மரணம், லண்டன் தீ விபத்து என்று பல நூறு விஷயங்களை இவர் துல்லியமாக கணித்து இருக்கிறார்.
காலநிலை மாற்றம்: காலநிலை நெருக்கடி சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில், இது இன்னும் மோசமாகிவிடும் என்று கணித்துள்ளார். அவரது கணிப்புகளில் இருந்து ஒரு பத்தியில், "வறண்ட பூமி மேலும் வறண்டு வளரும், அதன் விளைவாக பெரும் வெள்ளம் ஏற்படும்.". உலகில் இன்னும் பல நாடுகளில் வெள்ளம், காட்டுத்தீ ஏற்படும். அது பஞ்சத்திற்கு வழி வகுக்கும். ஏஐ சாதனங்கள் மனிதர்களை கட்டுபடுத்த தொடங்கும். மனிதர்கள் கணினிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுவார்கள். ஏஐ சாதனங்கள் மனிதர்களை ஆளும் என்று அவர் தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புதிய போப் வருவார்: அவரின் கணிப்பின்படி, உலகம் விரைவில் போப் பிரான்சிஸுக்கு மாற்றாக புதிய போப்பை தேர்வு செய்யும்.."மிகவும் வயதான போப்பாண்டவரின் மரணத்தின் மூலம், நல்ல வயதுடைய ஒரு ரோமன் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார், அவர் மென்மையானவர். அதே சமயம் நீண்ட காலம் பதவியில் இருப்பார், என்று கூறப்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications