"Time to Lead" தாக்குப்பிடித்து திருப்பி அடிக்கும் ஹர்திக் பாண்டியா.. அடுத்த கபில் தேவ் ஆகிறாரா?
சென்னை: இன்னொரு கபில் தேவ், இன்னொரு ஜாக் கல்லீஸ், இன்னொரு பிராவோ இல்லை, இவர் ஹர்திக் பாண்டியா. இந்திய கிரிக்கெட் அணிக்கு மகுடம் சேர்க்கப் போகும் மாவீரன். அவரின் பாதையையும், எழுச்சியையும் பார்க்கலாம்.
"என்னுடன் ஓப்பிட தகுதியற்றவர் ஹர்திக் பாண்ட்யா"
இவை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், இளம் வீரரான ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய வார்த்தைகள். இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அசாரூதீன் சென்றால் சச்சின், சச்சின் சென்றால் கோலி என்று இடம் நிரம்பிவிடும். அதேபோல் பந்துவீச்சில் ஜாகீர் கான் சென்றால் பும்ரா, கும்ப்ளே இல்லையென்றால் அஸ்வின் என்று இடம் நிரம்பிவிடும். ஆனால் கபில் தேவ் விட்டுச்சென்ற வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்ற இடம், ஹர்திக் பாண்டியா வரும் வரை யாராலும் நிரப்பப்படவில்லை.
ஒவ்வொரு முறை ஜாக் கல்லீஸ், பென் ஸ்டோக்ஸ், பிராவோ, சாம் கரன் என்ற பேச்சு வரும் போது எல்லாம், இந்திய அணியில் அப்படி ஒரு ஆல் ரவுண்டர் இல்லையே என்ற ஏக்கம் இந்திய வீரர்களுக்கு எப்போதும் ஏற்படும். சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்திக் கால் பதித்த போது, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று சகல விஷயங்களிலும் அசத்த, இவர் தான் அடுத்த கபில் தேவ் என்று பத்திரிகைகளும், ரசிகர்களும் புகழ் மாலை சூடினர். இவை எல்லாம் 2019ம் ஆண்டு வரைதான். பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் சர்ச்சையில் சிக்கிய பின், அனைத்தும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக திரும்பின.

விமர்சனங்கள்
இதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் களத்திலும் ஹர்திக் பாண்டியா சொதப்ப, விரக்தியில் கபில் தேவ் பேசிய வார்த்தைகள் தான் மேலே இருப்பவை. இந்த விமர்சத்தோடு ஆடம்பரமாக வாழ்கிறார், நடிகையோடு ஊர் சுற்றுகிறார், திருமணம் செய்யாமல் குழந்தைப் பெற்றுக்கொள்கிறார், ஐபிஎல் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என வாய் பேச்சுகளும் அதிகமாகின.

மருத்துவமனையில் ஹர்திக்
ஒரு கட்டத்தில் காயத்திற்கு செய்யப்பட்ட ஆபரேசன் காரணமாக ஹர்திக் பாண்டியாவால் நடக்கக்கூட முடியவில்லை. இன்னொருவரின் உதவியின்றி எந்த செயலையும் ஹர்திக்கால் செய்ய முடியாத சூழல். ஆனால் ஹர்திக் பாண்டியா மனம் தளரவில்லை. விசை கொண்டு ஈட்டி எறியும் வீரன் வலுப்பெற்றிருப்பது சதைகளால் அல்ல, கதைகளால். அப்படிதான் ஹர்திக் பாண்டியாவுக்கு அவர் கடந்து வந்த பாதை ஸ்ட்ரீட் கிரிக்கெட் பாதை கைக்கொடுத்தது.

ஐபிஎல் தொடர்
வாழ்க்கையை மீண்டும் புதிய உறவுகளோடும், புதிய பயிற்சிகளோடும் தொடங்கினார். மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தாலும் உடனடியாக பந்துவீசிடவில்லை. சூழலுக்கும், களத்திற்காகவும் காத்திருந்தார். ஐபிஎல் தொடரில் தேவையான இடங்களில் மட்டும் பந்துவீசி குறைகளை நிவர்த்தி செய்தார். இன்னும் சொல்லப்போனால், ஐபிஎல் போட்டிகளை தனக்கான பயிற்சிக் களமாக மாற்றிக் கொண்டார்.

மீண்டு வந்த ஹர்திக்
அங்கிருந்துதான் மீண்டும் இந்திய அணிக்குள் இடம்பிடித்தார். இப்போது ஹர்திக் பாண்டியா ஒவ்வொரு முறை பந்தை கையில் எடுக்கும் போதும் விக்கெட்டுகள் விழுகின்றன. பேட்டிங்கை பற்றி அவரது புள்ளி விவரங்களே சொல்லிவிடும். நேற்றையப் போட்டியில் 4 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுக்க வேண்டும் என்றபோது, ஒரு டாட் பால் வந்தபின், ஹர்திக் கொடுக்கும் எதிர்வினையே அவரின் மன உறுதியை சொல்லிவிட்டது. ஒரு நிமிடம் தோனியை நினைவிபடுத்திவிட்டார் என்றே சொல்லலாம்.

முதல் ”ஹர்திக்”
இந்திய கிரிக்கெட்டில் இடம்பிடித்த போது கபில் தேவ், ஜாக் கல்லீஸ் போல் உலகத்தரம் வாய்ந்த ஆல் ரவுண்டராக வர வேண்டும் என்ற ஆசையை கூறி இருப்பார். இதனால் சர்வதேச பத்திரிகைகளும் ஹர்திக் பாண்டியாவை அடுத்த கபில் தேவ், அடுத்த காலீஸ், அடுத்த பிராவோ என்று எழுதி வருகின்றன. ஆனால் இனி அடுத்த என்ற பேச்சுக்கே இடமில்லை. இனி அவர் முதல் ஹர்திக் பாண்டியா. அவரது கனவை எட்டிப்பிடித்து, ஹர்திக் இப்போது அடுத்த கட்டத்தை நெருங்கிவிட்டார்.

இந்திய அணியின் எதிர்காலம்
ஹர்திக் பாண்டியா அணியில் இருந்தால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனையோ, ஒரு சுழற்பந்துவீச்சாளரையோ எடுக்க முடியும். இனி இந்திய அணி பங்கேற்க உள்ள முக்கியத் தொடர்களின் வெற்றிகளில் ஹர்திக் பாண்டியா பெரும் பங்காற்றப் போகிறார். இந்திய அணியின் எதிர்காலம் என்று கேஎல் ராகுல், ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் என்று யாரை யாரையோ முன் நிறுத்தி வருகின்றனர். ஆனால் யுவராஜ், சேவாக், ஹர்பஜன் என்று ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியில், எங்கிருந்தோ வந்த தோனி கேப்டனாக மாறியது போல் விரைவில் ஹர்திக் பாண்டியா அந்த நிலையை எட்டுவார் என்று நம்புவோம்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications