ஐடி ரெய்டு.. 1 பைசா கூட பறிமுதல் செய்யல.. அந்த 2 நிறுவனத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. எ.வ வேலு
சென்னை: கடந்த 5 நாட்களாக எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடக்கும் நிலையில், ஒரு பைசா கூட என்னிடம் இருந்து பறிமுதல் செய்யவில்லை என்றும், காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி நியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்தார்.
கல்வித் தந்தையாகவும், ஆன்மீகவாதியாகவும் இருக்கிறார் எ.வ. வேலு. தமிழக அரசு மூலமாக நிதி ஒதுக்கீடு அதிகம் இருக்கும் பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை என 3 முக்கிய துறைகள், அமைச்சர் எ.வ.வேலு வசம் உள்ளன. பணம் அதிகம் புரளும் துறைகளை வைத்துள்ள எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வெள்ளிக்கிழமையன்று வருமான வரித்துறை சோதனை தொடங்கியது.

இன்றுடன் 5வது நாளாக அமைச்சர் எ.வ வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. இதற்கிடையே நேற்று நடந்த சோதனையின் போது அமைச்சர் எ.வ வேலுவின் அருணை பொறியியல் கல்லூரி தொடர்புடைய இடங்களில் ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனை குறித்து அமைச்சர் எ.வ வேலு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கோயம்புத்தூர் செல்லும் போது, அரசு விடுதி கிடைக்காத போது அப்பாசாமி கட்டியிருக்கின்ற ரெசிடன்ட் ஓட்டலில் நான் தங்குவது உண்டு. அதனை நான் இல்லை என்று சொல்லவில்லை. தேர்தல் நேரத்தில் அரசு இடங்களில் என்னால் தங்க முடியாது. அதனால் நான் அங்கு ஒரு 2 நாட்கள் தங்கியிருப்பேன். அப்போது அவர் அமைச்சர் என்றோ, அல்லது சட்டமன்ற உறுப்பினர் என்றோ என்னை வரவேற்று இருக்கலாம்.
அதுவும் எனக்கு நினைவு இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும், தொடர்பும் இல்லை. 2 நாட்களாக காசா கிராண்டில் 100 கோடி புடித்துவிட்டார்கள், அப்பாசாமி நிறுவனத்தில் 100 கோடி புடித்துவிட்டார்கள் என்று தகவல்கள் பரவி வருகிறது. அதனால் தான் இன்று அழுத்தமாக சொல்கிறேன்.. 100 சதவீதம் அந்த 2 கம்பெனிகளுக்கும் எனக்கும் என் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
உங்களுக்கு தெரிந்தவரிடம் ரெய்டு நடப்பாக கூறினால், அங்கு பணம் கைப்பற்றப்பட்டது என்று சொன்னால் அந்த பணம் உங்களுடையது என்று சொல்லிவிட முடியுமா?.. என் வீட்டிலோ அல்லது என் மனைவி வீட்டிலோ அல்லது என்னுடைய 2 பிள்ளைகள் வீட்டிலோ அல்லது கல்லூரி வளாகத்திலோ வீட்டிலோ அவர்கள் ஒரு பைசா பறிமுதல் செய்திருந்தால் கூட நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவரவர்கள் தொழில் செய்கிறார்கள்.
அவர்கள் அங்கு கணக்கை சரியாக காட்டவில்லை என்பதற்காக, ரெய்டு போன இடங்களில் பணம் கிடைக்கவில்லை என்றால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். என் வீட்டிலோ அல்லது என் மனைவி வீட்டிலோ அல்லது என்னுடைய 2 பிள்ளைகள் வீட்டிலோ ஒரு பைசா கூட கைப்பற்றவில்லை. எனவே வெளியில் பரவி வரும் அந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. இவ்வாறு அவர் கூறினார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம்












Click it and Unblock the Notifications