Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத் மட்டுமல்ல.. தேசிய நெடுஞ்சாலைகளில் திடீர் பள்ளம், தடுப்பணைகளில் உடைப்பு.. எழும் விமர்சனங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 30 ஆம் தேதி குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தொங்கும் பாலம் இடிந்து விழுந்ததில் ஏறக்குறைய 141 பேர் உயிரிழந்தனர். முதற்கட்டமாக இந்த அசம்பாவிதம் தொடர்பாக முதற்கட்டமாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் எனக் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் தனது அரசின் பங்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

குறைந்தது 100 ஆண்டுகள் பழமையான இந்தப் பாலம், பழுது பார்க்கப்பட்டு, சில நாள்களுக்கு முன்னதாக தான் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. பயன்பாட்டுக்கு வந்த வேகத்திலே 100 பேருக்கு அதிகமான உயிர்களை இந்தப் பாலம் பலிவாங்கியுள்ளது.

 குஜராத் பாலம்

குஜராத் பாலம்

இந்தக் கோரச் சம்பவம் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், ராஜ்யசபா டிவியின் முன்னாள் சி.இ.ஒ. மற்றும் எடிட்டராக இருந்த குர்தீப் சிங் சாப்பல் பகிர்ந்துள்ள ஒரு தகவலை ரீ ட்வீட் செய்துள்ளார். அதில் 'தொடர்ந்து இப்படி விபத்துகளை நடப்பது அவமானம்' என்று கூறியுள்ளார். மேலும் அதில் 'மோடி ப்ரிட்ஜ் கோலாப்ஸ்' என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தியுள்ளார்.

இதில் சசி தரூர் ரீ-ட்விட் செய்துள்ள குர்தீப் சிங் சப்பல் பதிவைத் தொடர்ந்து படிக்கும் யாரும் கொஞ்சமாக அல்ல; அதிகமாகவே அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். அந்தளவுக்கு ஒரு புலனாய்வு பதிவைப் போட்டுள்ளார் சாப்பல். அவரது பதிவில் மோடி ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும் எத்தனைப் பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன என்று ஆதாரப்பூர்வமாகச் சுட்டிக்காட்டி உள்ளார். சாப்பல் தன் பதிவில், "கடந்த சில நாள்களாகப் பாலம் இடிந்து விழுவதும் சாலைகள் பள்ளம் ஏற்படுவதும் தடுப்பணைகள் உடைவதும் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இது ஒரு ஊழல். இதை எளிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம்" என்று கூறியுள்ளார். இவரது ட்விட்டில் மொத்தம் 26 சம்பவங்களை வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன. அதன் மொத்த விவரங்களை நாம் பட்டியல் போட்டு வரிசையாக விளக்கி உள்ளோம்.

நொய்டா சாலை

நொய்டா சாலை

கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி கிரேட்டர் நொய்டாவில் சாலையில் திடீரென்று ஒரு பகுதி உள்வாங்கியதையும் அதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் பற்றிய காணொளிப் பதிவு ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியதையும் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் இதே மாதம் 30 ஆம் தேதி பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள சாலை திடீரென்று இடிந்ததில் காரும் பைக்கும் மோதியதில் விபத்துக்கு உள்ளானது. அதில் ஒருவர் உயிரிழந்தார் என்ற செய்தியும் இவரது லிங்கில் இடம்பெற்றுள்ளது.

மேலும் ஒரு சம்பவம் காஷ்மீரைச் சார்ந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 27 தொழிலாளர்கள் காயமடைந்தனர். பாலத்தினை இரும்பு ஷட்டரை இணைக்க முயன்ற போது இந்த விபத்து நடந்ததாக அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தத் தகவலையும் சாப்பல் தேடிப்பிடித்துத் தந்துள்ளார். அதேபோல் இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி உத்தரகாண்ட் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணியிலிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. அதில் சிக்கிய 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 4 பேர் சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது.

விரைவு சாலை

விரைவு சாலை

அடுத்ததாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குர்கானில் உள்ள துவாரகா விரைவு சாலையில் 29 கிமீ நீளத்திற்குப் பெரிய மேம்பாலம் ஒன்று கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இடிந்து விழுந்தது. இதில் 3 தொழிலாளிகள் காயமடைந்தனர் என்ற செய்தியையும் இந்தப் பாலம் 18.9 கிமீ அமைக்கப்பட்டு வந்தது என்றும் தௌல்தாபாத் சௌக் அருகே அமைக்கப்பட்டிருந்த இப்பாலத்தின் பகுதிகள் திடீரென்று இடிந்து விழுந்தன என்றும் இவ்விபத்து அந்த மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்றும் சாப்பல் அளித்துள்ள செய்தியின் சுட்டியில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முமத்புரா மேம்பாலம் சம்பவத்தை இணைத்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 அன்று அகமதாபாத்தில் கட்டப்பட்டு வந்த முமத்புரா மேம்பாலம் சரிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. 853 மீட்டர் நீளமுள்ள இந்தப் பால விபத்து பெரிய தலைப்புச் செய்தியானது. இதனைக் கட்டிவந்த நிறுவனம் ஏற்கெனவே இதே மாதிரியான புகாரில் இரண்டு முறை சிக்கியது. இது அந்நிறுவனத்தின் மூன்றாவது விபத்தாகச் சுட்டக்காட்டப்பட்டது.

பீகார் சம்பவம்

பீகார் சம்பவம்

இதே ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் பீகார் மாநிலம் சுல்தான்கஞ்ச் பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. 30ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தபோது, கட்டுமானப் பணியிலிருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்தது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது நிம்மதியான செய்தி.

இதனை அடுத்து ஒன்றொரு விபத்து. கடந்த 2021 இல் ஏப்ரல் மாதம் மேற்கு டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் தூண்கள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 50 வயது முதியவர் பலியானார். பாலத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் இந்த விபத்தில் சிக்கியுள்ளார். அடுத்த சம்பவம் 2020 ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. கொல்கத்தா மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள பைஷ்னாப் நகரில் ஃபராக்கா தடுப்பணையின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் பொறியாளர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். மேலும் நான்கு பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

தொடரும் விபத்துகள்

தொடரும் விபத்துகள்

சாப்பல் தனது பதிவில் குறிப்பிடாத இன்னொரு விபத்து ஒன்று உள்ளது. காசர்கோடு தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி கடந்த 29 ஆம் தேதி அன்று அதிகாலை இடிந்து விழுந்தது. கான்கிரீட் போடும் வேலை நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தரமற்ற கான்கிரீட் பயன்படுத்தப்பட்டதால் விபத்து நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த தரமற்ற கட்டுமான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரித்து வருவதாக இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+