நாட்டு நாட்டு பாட்டு மட்டுமல்ல RRR படமே ஆஸ்கார் வென்ற தருணம்..வாழ்த்துக்கள்..மதன் கார்க்கி
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மதன் கார்க்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சென்னை: எஸ்.எஸ்.ராஜமவுலி இந்திய திரை வரலாற்றில் மிகப்பெரிய சரித்திரம் படைத்துள்ளார். எந்த இந்திய திரைப்படத்திற்கும் கிடைக்காத பெருமை ராஜமவுலி இயக்கிய RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. இது பாடலுக்கு மட்டுமல்ல படத்திற்கே விருது கிடைத்தது போல மகிழ்ச்சி அடைவதாக மதன் கார்க்கி கூறியுள்ளார்.
கடந்த 2009 ஆண்டு ஆஸ்கார் விருது மேடையில் விருதினை கைகளில் ஏந்தி எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறி தமிழின் பெருமையை உலகம் அறியச் செய்தவர் ஏ.ஆர்.ரகுமான். இன்று மீண்டும் தென் இந்தியாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஆஸ்கார் விருது விழா மேடையில் கிடைத்துள்ளது.
சங்கீத ஸ்வரங்கள் ஏழு இருக்கா.. இன்னும் இருக்கா என்று இன்றைக்கும் பலராலும் முணுமுணுக்கப்படும் பாடல் அழகன் படத்தில் இடம் பெற்ற பாடல். அந்த பாடலுக்கு இசையமைத்தவர் மரகதமணி என்ற கீரவாணி.

கீரவாணி
தமிழில் பாலச்சந்தரால் மரகதமணியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தெலுங்கில் கீரவாணியாக இசை ராஜாங்கம் நடத்தி வருகிறார். எஸ்.எஸ்.ராஜமவுலியின் பல படங்களிலும் இசை அமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். பாகுபலி படங்களில் அவரது இசை பலராலும் ரசிக்கப்பட்டது.

நாட்டு நாட்டு பாடல்
இன்றைக்கு RRR படத்தில் இடம் பெற்ற நாட்டு..நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருதினை வென்று உலக அரங்கில் மீண்டும் இந்திய இசையை தலைநிமிரச்செய்துள்ளார். இயக்குநர் ராஜமவுலிக்கும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு நன்றியை பகிர்ந்து கொண்டார். பாடலாக பாடி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

ஆஸ்கார் விருது விழா
நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது விழா மேடையில் ஒளிபரப்பான அந்த தருணம் அனைவருமே எழுந்து உற்சாகமாக ஆடி இந்திய திரைப்படத்துறையினருக்கும் ராஜமவுலி குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

அன்று ஏ.ஆர்.ரகுமான்..இன்று கீரவாணி
2009 ஆம் ஆண்டு ஏ.ஆர் ரகுமான் ஜெய்ஹோ பாடலுக்கு ஆஸ்கர் விருதினை வென்ற நிலையில் இந்த ஆண்டு இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசியர் சந்திரபோஸ் ஆகியோர் நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கார் விருதினை பெற்றுக்கொண்டனர்.

மதன் கார்க்கி வாழ்த்து
நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட பாடலாசிரியர் மதன் கார்க்கி இது பாடலுக்கு மட்டுமல்ல படத்திற்கே விருது கிடைத்தது போல உணர்வதாக தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமவுலி, படத்தில் இடம்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நடன கலைஞர்கள், கீரவாணி, பாடலாசியர் சந்திரபோஸ், பாடகர்கள் அனைவருக்குமே எனது வாழ்த்துக்கள் என்று மதன் கார்க்கி கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications