இதெல்லாம் ஜுஜுப்பி! சோடா பாட்டில்.. கோட்சே ஆதரவு.. இதற்கு முன்பே வார்த்தையை விட்ட மன்னார்குடி ஜீயர்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர்கள் யாரும் ரோட்டில் நடமாட முடியாது என்று மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பகாமன்னார் ஜீயர் தெரிவித்துள்ளார்.. என்னங்க ஒரு ஜீயர் அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் நேரடியாக எச்சரிக்கை விடுக்கிறாரே என்று தோன்றுகிறதா.. கொஞ்சம் மூச்சை பிடித்துக்கொள்ளுங்கள்.. மன்னார்குடி செண்டலங்கார செண்பகாமன்னார் ஜீயர் இதற்கு முன் இதைவிட சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
Recommended Video
தருமபுர ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இவர் பட்டினப் பிரவேசம் என்ற பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு விசிக, திக உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இவரை பல்லக்கில் கோவிலுக்கு தூக்கி செல்வதுதான் இந்த பிரவேசத்தின் முறையாகும். இதை விசிக, திக எதிர்த்த நிலையில் கோட்டாச்சியார் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

ஆதீனம்
ஆனால் ஆதீனம் மாசிலாமணி கண்டிப்பாக பல்லக்கில் ஏறுவார்.. முடிந்ததை பாருங்கள் என்று பாஜக, இந்து முன்னணி போன்ற வலதுசாரி அமைப்புகள் தெரிவித்துள்ளன. நானே பல்லக்கை தூக்கி செல்வேன் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் கூறி உள்ளார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பகாமன்னார் நேற்று களிமேட்டில் தெரிவித்த கருத்துக்கள்தான் அதிக கவனம் பெற்றது. அப்போது பேசிய அவர், பட்டினப் பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக்கூடிய ஒன்று.

எச்சரிக்கை
இதை யாராலும் தடுக்க முடியாது. எந்த அமைப்பிற்கும் அந்த அருகத்தையும் கிடையாது. அரசுக்கும் அந்த அருகதை கிடையாது. முடிந்தால் இந்த பட்டினப் பிரவேசத்தை தடுத்து பாருங்கள். யாராலும் முடியாது. இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படும் எந்த அமைச்சரும்.. எம்எல்ஏவும் சாலையில் நடமாட முடியாது. இந்து மதத்திற்கு எதிரான துரோகிகளுக்கு எச்சரிவுக்காய் விடுகிறேன்.. கடுமையான எச்சரிக்கை விடுகிறேன்.

நடமாட முடியாது
தேச துரோகிகளுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன்.. உங்களால் பட்டினப் பிரவேசத்தை தடுக்க முடியாது. அரசை நாங்கள்தான் நடத்துகிறோம் என்று கூறிய கிறிஸ்துவ பாதிரியார்களை கண்டிக்க முடியவில்லை. அவர்களை கைது செய்ய முடியவில்லை. இதுதான் மதசார்பற்ற அரசா? இந்துக்களுக்கு ஆதரவா இந்த அரசு செயல்பட வேண்டும் என்று கடுமையாக பேசி இருந்தார். மன்னார்குடி ஜீயர் இப்படி பேசுவது முதல்முறை கிடையாது. இதற்கு முன்பே கோட்ஸேவை ஆதரித்து ஒருமுறை பேசி இருக்கிறார்.

இந்து தீவிரவாதி
2019 லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது.. இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.. அவர் கோட்ஸே என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார். இந்த நிலையில் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றது அவரது தேசபக்தியை காட்டுகிறது. அது நாதுராம் கோட்ஸேவின் தேச பக்தி. அவர் தேச பக்தி காரணமாக இப்படி செய்தார். பிரிவினைவாதத்திற்கு எதிராக அவர் தேச பக்கத்தி கொண்டு இருந்தார். இருந்தால் கோட்ஸே செய்தது தவறுதான், என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

கோட்ஸே ஆதரவு
அதோடு கமல்ஹாசன் ரோட்டில் நடமாட முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதேபோல் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் போது மன்னார்குடி ஜீயர் இப்படித்தான் பேசி இருந்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை யார் எதிர்த்தாலும் அவர்கள் தேச துரோகிகள் என மன்னார்குடி செண்பக ராமானுஜ ஜீயர் கருத்து தெரிவித்து இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க நித்தியானதாவிற்கும் இவருக்கும் கூட ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டத்தை மதித்து நேரில் வராமல் கோழை போல ஒளிந்து கொண்டு இருக்கிறார் நிதித்யானந்தா.

கோழை
அவர் ஒரு கோழை. நாட்டை விட்டு ஓடுவது பெரிய தேச துரோகம் என்றும் மன்னார்குடி ஜீயர் பேசி இருக்கிறார். அதேபோல் குலதெய்வ கோவில் வழிபாடுகள் தவறாக நடக்கிறது. இங்கு மாமிச படையல் நடக்கிறது. மாறாக இங்கு இந்து மத வழிபாட்டு முறை கொண்டு வரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டவர் மன்னார்குடி ஜீயர். இது அப்போது குலதெய்வ வழிபாடு நடத்தும் பல இந்துக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2020ல் வேல் யாத்திரை உச்சத்தில் இருந்த போது அதை பற்றியும் இவர் பேசி இருக்கிறார்.

வேல் யாத்திரை
வேல் யாத்திரை நடத்த இந்துக்களுக்கு உரிமை உள்ளது. வேல் யாத்திரை நடத்த யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. இந்து தர்மத்தை பற்றியோ திருமாவளவன் போன்றவருக்கு என்ன தெரியும், என்று கேள்வி எழுப்பினார். முன்னதாக ஆண்டாளை விமர்சித்த விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சோடா பாட்டில் பறக்கும் என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார். இந்த கருத்தை மன்னார்குடி ஜீயர் நேரடியாக ஆதரித்தார். சோடாபாட்டில் கருதிற்காக பின்னர் ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் மன்னிப்பு கேட்டார்.

மன்னிப்பு
ஆனால் அப்படி மன்னிப்பு கேட்டு இருக்க கூடாது என்றும் மன்னார்குடி ஜீயர் ஆதரவாக பேசினார். இதெல்லாம் போக தமிழ்நாட்டில் பசுவதையை கண்காணிக்க பசு பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் செண்டலங்கார செண்பகா மன்னர் ஜீயர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் திருச்சியில் பேசிய இவர், பசு மாடுகளை வாகனங்களில் கொண்டு செல்வதில் உள்ள விதிமீறல், பசுவதையைக் கண்காணிக்க தமிழ்நாடு பசு பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். பல முறை இப்படி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசிய மன்னார்குடி ஜீயர் இப்போது அரசுக்கு எதிராகவும் பேசி இருக்கிறார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications