தமிழகத்தில் இன்று ரம்ஜான் கிடையாது... நாளை தான்.. அரசு தலைமை காஜி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளதாக தவ்ஹித் ஜமாத் அறிவித்துள்ளது. ஆனால் தமிழகம் மற்றும் புதுவையில் ரம்ஜான் பண்டிகை எப்போது? கொண்டாடப்பட உள்ளது என்பது பற்றி அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். அதன்படி இன்று ரம்ஜான் இல்லை. நாளை (ஏப்ரல் 11) தான் ரம்ஜான் பண்டிகை என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் ரமலான் நோன்பை கடைப்பிடித்து ஈடுபட்டு ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஒரு மாதம் வரை இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சாயங்காலம் வரை விரதம் கடைப்பிடிப்பார்கள். மாலையில் இப்தார் விருந்து வைத்து விரதத்தை முடிப்பார்கள். நோன்புக்கு முன்பு சஹர் என்ற உணவும், நோன்பிற்கு பிறகு அதாவது முடிக்கும் நேரத்தில் இப்தார் என்றும் அந்த உணவு அழைக்கப்படுகிறது.
மேலும் ரம்ஜான் பண்டிகையின் தேதி என்பது இடத்தை பொறுத்து மாறுபாடும். வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் கொண்டாடப்படுவது தான் இதற்கு காரணமாகும். இந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் மார்ச் 12 ஆம் தேதிதான் பிறை தெரிந்தது. இதனால்தான் ரமலான் மாதம் அன்று தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறதா? இல்லை நாளை கொண்டாடப்பட உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி நேற்று பிறை தெரியாததால் தமிழகம், புதுவையில் நாளை (ஏப்ரல் 11) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‛‛பிறை தேட வேண்டிய நாளான ஏப்ரல் 9 ம் தேதி தமிழகத்தின் கோவை - சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி - வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டது. அதன்படி ஏப்ரல் 9 மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகிறது. இதனால் இன்று (ஏப்ரல் 10) நோன்பு பெருநாள்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் இன்று ரம்ஜான் என அறிவிக்கப்பட்டாலும் கூட அரசு தலைமை காஜி இன்று இல்லை. நாளை தான் தமிழ்நாடு, புதுச்சேரியில் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications