சென்னையில் பிரபல ரவுடி சிடி மணி நள்ளிரவில் கைது.. தலைமறைவாக இருந்தவரை தூக்கிய தனிப்படை!
சென்னை: சென்னையை கலக்கிய பிரபல ரவுடி சிடி மணியை நள்ளிரவில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி சிடி மணி. இவர் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளில் சிடி விற்பனை செய்து வந்ததால் சிடி மணி என்று அழைக்கப்பட்டார்.
நாளடைவில் அவர் சிலருடன் கைகோர்த்து கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

குண்டர் சட்டம்
மேலும் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றித்திரியும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என காவல்துறையினர் அதிரடியாக தெரிவித்தனர். மேலும் பல்வேறு நிலுவையில் உள்ள வழக்குகள் பதியப்பட்டுள்ள சி.டி மணி தலைமறைவாக இருந்து உள்ளார்.

திண்டுக்கல் தாதா
திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல தாதா ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு அவர் மறைந்தவுடன் மணி தலைமையில் ஒரு புதிய ரவுடி கும்பல் உருவானது. இவர் இதுவரை 3 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சிடி மணியை கொலை செய்ய முயற்சி நடந்தது.

காவல் துறை
இந்த விவகாரத்தில் 4 பேர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் தேனாம்பேட்டையில் பைக்கில் வந்து சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் மீது வெடிகுண்டு வீசியதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

தீவிர விசாரணை
இதையடுத்து சிடி மணி எங்கே இருக்கிறார் என்பது குறித்து தனிப்படை போலீசார் ரகசிய தகவல் கிடைத்த அடிப்படையில் நேற்று நள்ளிரவு சென்னை அடுத்த நாவலூரில் தங்கியிருந்த இடத்தில் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications