சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை ரூ.1,946 கோடி சொத்துவரி வசூலித்துள்ளது. தொழில் வரி ரூ.452 கோடி வசூலாகி இருக்கிறது. சொத்துவரி செலுத்தாமல் இருந்த 2 லட்சம் பேர் வரையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பணிகளுக்கு இடையே சொத்துவரி வசூலிப்பதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது என்று சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

தமிழ்நாட்டிலேயே பணக்கார நகரம் என்றால் அது சென்னை மாநகராட்சி தான். பல ஆயிரம் கோடி சொத்து மதிப்பு உடைய மாநகராட்சியாக உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு பல்வேறு வழிகளில் வருமானம் கொட்டுகிறது. குறிப்பாக சொத்துவரி, தொழில்வரி ஆகியவை பிரதான வருவாயாக இருக்கிறது.

Notices Issued to 2 Lakh People in Chennai Important Announcement for House and Building Owners

சுமார் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு சொத்து செலுத்துவதால், மிகப்பெரிய அளவில் வரி வருவாய் கிடைத்து வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரையிலும், 2-வது அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் 1-ந்தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரையிலும் செலுத்த வேண்டும் என்பது விதியாக உள்ளது.

வீடு வீடாக செல்லும் அதிகாரிகள்

இந்த கால கட்டத்துக்குள் வரி செலுத்தினால் மாநகராட்சி சார்பில் 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குவதை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதன்படி, 2025-26-ம் நிதியாண்டுக்கான சொத்து வரியானது கடந்த ஏப்ரல் மாதம் முதல் வசூலிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் 400-க்கும் மேற்பட்ட வரி வசூலிப்பாளர்கள் வீடு வீடாக சென்று வரி வசூல் செய்து வருகிறார்கள். மாநகராட்சியின் தீவிர வரி வசூல் நடவடிக்கையால் நிலுவை தொகை வைத்துள்ள பலரும் ஆர்வமுடன் சொத்துவரி செலுத்துகிறார்கள்.

'கணவனுக்கு பதில்' தாம்பரம் தனியார் பள்ளி ஆசிரியையின் நட்பு.. புழல் சிறையில் மேடவாக்கம் இளைஞர்
2 லட்சம் பேருக்கு நோட்டீஸ்

அந்த வகையில், முதல் அரையாண்டுக்கு ரூ.1,002 கோடி சொத்துவரி வசூலாகி உள்ளது. இதற்கிடையே, 2 லட்சம் பேர் வரையில் சொத்துவரியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சொத்துவரியை செலுத்தாத நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருகக்றிது. பெரும் தொகையை நிலுவை வைத்திருந்த நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டப்பட்டு வருகிறது.

ரூ.1,946 கோடி வசூல்

இதேபோல, 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த வரும் மார்ச் 31-ந்தேதி கடைசி நாளாகும். சொத்துவரி செலுத்தாத நபர்கள் அதற்குள் சொத்துவரி செலுத்திட வேண்டும் என சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2025-26-ம் நிதியாண்டில் தற்போது வரை ரூ.1,946 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+