'கணவனுக்கு பதில்' தாம்பரம் தனியார் பள்ளி ஆசிரியையின் நட்பு.. புழல் சிறையில் மேடவாக்கம் இளைஞர்
சென்னை: சென்னை தாம்பரம் சேலையூரைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர், தனியார் பள்ளியில் முதல்வராக வேலை செய்கிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்த பெற்று வசித்து வந்துள்ளார்கள். இந்த சூழலில் மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு பாராட்டி எல்லை மீற முயன்றாராம். அவரை போலீசார் கைது செய்தனர்.
திருமணமாகி கணவரை பிரிய முடிவு எடுத்த பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். முதல் காதலை அதாவது முதல் கணவனை வேண்டாம் என்று சொல்வதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும். அப்படி வலுவான காரணம் இல்லை என்கிற நிலையில், இரண்டாவதாக தேடும் நட்பு, காதல் திருமணத்தில் முடியும் முன்பே சிக்கல் ஏற்படாலாம். விவகாரத்து பெற விரும்பினால் முறையாக விவகாரத்து பெற்று அடுத்த திருமணத்தை பற்றி யோசியுங்கள்..ஏனெனில் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். சென்னை தாம்பரம் சேலையூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்

வெளிநாட்டில் வேலை
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் இளம்பெண் தனியார் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. தனியார் பள்ளி முதல்வரின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் விவாகரத்து பெற்று சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்காக விவாகரத்துக்கு பின்னரும் செல்போனில் பேசி வருகிறார்களாம்.
இன்ஸ்டாகிராம் நட்பு
இதற்கிடையில் 'இன்ஸ்டாகிராம்' மூலம் மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்ற இளைஞர், தனியார் பள்ளி முதல்வருக்கு அறிமுகம் ஆனார். இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். செல்போனில் ஆசிரியை உடன் ஹரி கிருஷ்ணன் அடிக்கடி பேசி வந்துள்ளாரா. அப்போது ஹரி கிருஷ்ணன், தான் பில்டிங் கட்டும் தொழில் செய்வதாக கூறி வந்தாராம்.
காரில் அத்துமீறல்
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியின் மதிய இடைவேளையில் இருவரும் பள்ளியின் அருகே சந்தித்து காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஹரி கிருஷ்ணன் திடீரென ஆசியையிடம் அத்துமீற முயன்றாராம். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக அவரை எச்சரித்துவிட்டு காரில் இருந்து இறங்கி பள்ளிக்கு சென்றுவிட்டார். இது குறித்து வெளிநாட்டில் வசித்து வரும் கணவருக்கு தகவல் தெரிவித்தார்.
அதற்கு அவர், ஹரி கிருஷ்ணனுடன் தொடர்பு துண்டித்துக் கொள்ளும்படி கூறினார். அதன்படி அந்த பெண், ஹரி கிருஷ்ணனிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.
காரில் எடுத்த வீடியோ
அப்போது தன்னிடம் பேசவில்லை என்றால், காரில் இருவரும் தனியாக இருந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் எனவும் அந்த பெண்ணை ஹரி கிருஷ்ணன் மிரட்டினாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மீண்டும் ஹரி கிருஷ்ணனிடம் பேசி வந்தாராம். இதற்கிடையில் வெளிநாட்டில் இருந்து அந்த பெண்ணின் கணவர் சென்னை வர இருப்பதாகவும், மீண்டும் இருவரும் சேர்ந்து வாழலாம் என தெரிவித்தாராம்.
இளைஞர் கைது
இதையறிந்த ஹரி கிருஷ்ணன், இளம்பெண் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்தாராம். என்னிடம் பேசிவிட்டு, உன் கணவருடன் சேர்ந்து வாழப்போகிறாயா? எனக்கேட்டு இளம்பெண்ணை தாக்கி, கழுத்தை பிடித்து கொலை செய்ய முயற்சித்தாராம். இதுபற்றி இளம்பெண் அளித்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரி கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications